காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

Apr 22, 2025,06:41 PM IST

சென்னை: தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழ்நாட்டில் வருகின்ற 28ஆம் தேதி வரை, ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டரித்தாலும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில்  எந்த அளவிற்கு மழை பொழிகிறத, அதற்கு அதிகமாக வெயிலின் தாக்கமும் இருந்து வருகிறது. இதனால் மதிய வேலைகளில் வெளியில் செல்ல முடியாமல் மக்கள் புலம்பி தவித்து வருகின்றனர். 




இதற்கிடையே தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி தொடர்ந்து நீடித்து வருகிறது. அதேபோல் தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், வரும் 28ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


அதன்படி, இன்றும் நாளையும் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.


ஏப்ரல் 24 முதல் 28 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 


மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஐ ஒட்டியும் இருக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு வெயில்: 


இன்று முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை தமிழகம்,புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும். அப்போது ஒரு சில பகுதிகளில் அசௌரிகம் ஏற்படலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

news

பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

news

ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்