தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

Apr 11, 2025,02:42 PM IST

சென்னை: மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில்  இன்று முதல் 17 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கோடை காலம் துவங்கிய பொழுதும், கடந்த வாரம் முதல்  ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, ஈரோடு, கடலூர், திருச்சி, திருவள்ளூர், நாகை, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில்

வெயில் அதிகரித்து காணப்படுகிறது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயிலும்,மழையும் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




அதன்படி, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் வலுவிழந்தது. இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌரிகம் ஏற்படலாம்.


ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.


சென்னை மழை: 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK vs LSG.. சென்னை சூப்பர் கிங்ஸ் அட்டகாச வெற்றி.. அசத்தலாக ஆடிய தோனி, துபே.. ரசிகர்கள் ஹேப்பி!

news

மக்களே எச்சரிக்கையாக இருங்க.. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம்..!

news

பாஜக கூட்டணியால்.. அதிமுகவிலிருந்து விலகிட்டாரா.. டி. ஜெயக்குமார் தரப்பு சொல்லும் விளக்கம் இதுதான்!

news

ரஜினிகாந்த் வழிக்கு மாறிய அண்ணாமலை.. பாபா முத்திரையுடன் போஸ்.. ஆன்மீக பயணம்!

news

மீன் பிடி தடைக் காலம்.. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை அறிவிப்பு..இன்று நள்ளிரவு முதல் அமல்!

news

இந்திய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளுக்கு.. கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

news

Vallarasu.. வல்லரசு வெளியாகி 25 வருடமாச்சு.. விஜயகாந்தின் அதிரடி ஆட்சி!

news

பெல்ஜியத்தில் வைத்து சிக்கினார் மெஹுல் சோக்சி.. ரூ. 14,000 கோடி மோசடி செய்த வைர வியாபாரி!

news

பீம் ஜோதியை ஏன் தடுக்கிறீர்கள்? .. நீங்கள் அம்பேத்கருக்கு எதிரானவரா.. டாக்டர் தமிழிசை கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்