சென்னை: லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் நல்லா நடந்துட்டிருக்கு.. 2 நாளில் உங்களுக்கு நல்ல செய்தி சொல்றேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணையப் போவதாக செய்திகள் பறந்து கொண்டுள்ளன. திமுக கூட்டணியில் முக்கியக் கட்சியாக உள்ள காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் இடங்களிலிருந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.
கமல்ஹாசன் கோவை அல்லது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது. இதுவரை இது எதுவும் உறுதியாக கூறப்படவில்லை. வெறும் தகவலாகவே வலம் வருகிறது. ஆனால் கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இணைவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா போயிருந்த கமல்ஹாசன் இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா போயிருந்தேன். என்னுடைய தக் லைப் படத்துக்காக. அதை முடித்து விட்டு வந்திருக்கிறேன்.
2 நாளில் உங்களை சந்திக்கவுள்ளேன். அப்போது நல்ல செய்திகளுடன் சந்திப்பேன். இப்ப வரைக்கும் அதான் செய்தி. நான் அங்கிருந்து கொண்டு வரலை எந்த செய்தியும். அது இங்கிருந்துதான் வர வேண்டும். பேசி விட்டு 2 நாளில் உங்களை சந்திக்கிறேன். ஏற்பாடுகள் நல்லா நடந்துட்டிருக்கு, 2 நாளில் சொல்றேன். இப்ப சொல்லக் கூடாது என்றார் கமல்ஹாசன்.
மறுபக்கம் திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டது. யாருக்கு எத்தனை, எந்தத் தொகுதி என்பது குறித்து இப்போது திமுக குழு தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. அது முடிவடைந்தவுடன் கூட்டணிக் கட்சிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி அதிகாரப்பூர்வமாக அவை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}