தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு.. "வாழ்த்துகள்".. அசத்திய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்!

Feb 03, 2024,11:37 AM IST

சென்னை: நடிகர் விஜய் புதிதாக ஆரம்பித்துள்ள கட்சிக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் தலைவர் கமலஹாசன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுக்களும், வரும் 2026ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு  வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இந்தக் கட்சிக்கு  தமிழக வெற்றி கழகம் என்ற பெயரிட்டுள்ளனர். விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், தொண்டர்கள், என அனைவரும் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.


இந்நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் விஜய் தொடங்கிய புதிய கட்சியை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்




இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


வெளிநாடு சென்றுள்ள மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நம்மவர். கமலஹாசன் அவர்கள் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள, நடிகர் விஜய் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.


இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுகளும், வரும் 2026ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீப காலத்தில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கியிருக்கிறார் கமல்ஹாசன். அவரது தீவிர ரசிகரும், அவர் மீது நிறைய அன்பு வைத்துள்ளவருமான விஜய் தற்போது கமல் பாணியில் அரசியலில் குதித்திருப்பது இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரு தரப்பும் கை கோர்த்து அரசியல் பாதையில் நடை போடும் வாய்ப்பு வருமா என்ற எதிர்பார்ப்பும் எட்டிப் பார்த்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்