கட்சியை எப்படி வளர்க்கலாம்.. மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம்.. கமல்ஹாசன் தலைமையில்!

Aug 23, 2024,11:12 AM IST

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று இக்கட்சி தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெற உள்ளது.


நடப்பாண்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  சார்பில் நடிகர் கமலஹாசன் போட்டியிடவில்லை. மாறாக திமுகவிற்கு ஆதரவளித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அடுத்து 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் வருகிறது. இதற்காக பல்வேறு கட்சியினரும் என்ன மாதிரியான தேர்தல் யுக்திகளை கையாளலாம் என்பது தொடர்பாக தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றனர். இதற்கிடையே நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியின் அடுத்த கட்ட பணிக்கான கட்சி கொடியை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து மிக பிரம்மாண்டமாக கட்சி மாநாடும் நடத்த திட்டமிட்டுள்ளார். 




அந்த வரிசையில் மக்கள் நீதி மையக் கட்சித் தலைவர் கமலஹாசன் கட்சியின் உட்கட்டமைப்புகளை எப்படி வலுப்படுத்துவது.. இக்கட்சியை அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டு செல்வது ..என்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை மேற்கொள்ள இருக்கிறார். குறிப்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு கட்சியை எப்படி தயார் படுத்துவது என்பது தொடர்பாகவும் விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.


இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டம் மநீம தலைவர் கமலஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காலை 11 மணியளவில்  நடைபெறுகிறது. இதில் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்கை குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்