Election-ல நிக்க கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டுதான் சீட் கொடுத்தாங்க.. அமைச்சர் உதயநிதி கலகல!

Aug 05, 2024,01:29 PM IST

சென்னை: லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க நிகழ்ச்சியில் முன்னாள் மாணவராக கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாக பேசினார்.


லயோலா கல்லூரியின் பழைய மாணவர்கள்  சந்திப்பு விழா அங்கு கொண்டாடப்பட்டது. அதில் உதயநிதி ஸ்டாலின், நடிகர் அரவிந்த் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,  லயோலா காலேஜ் Election-ல நிக்க கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டுதான் சீட் கொடுத்தாங்க. ஆனா இப்ப நா ஒரு எம்எல்ஏ ஆகி  Election-ல நின்னு செயிச்சு ஒரு மினிஸ்டர் ஆகி வந்திருக்கேன்னா அது இந்த லயோலாவோட வளர்ப்பு தான். இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் போது நிறைய விருது கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அப்போது எனக்கு விருது இல்லையா என்று கேட்டேன். நீங்கள் வந்தால் மட்டும் போதும் என்று கூறினார்கள். தற்பொழுது விருது வாங்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.




லயோலா கல்லூரியில் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்துள்ளது. அதில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. 3 நாட்களுக்கு முன்னர் நமது முதலமைச்சர் லயோலோ கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நான் முதலமைச்சராக கலந்து கொள்ளவில்லை. முன்னாள் மாணவருடைய தந்தையாக தான் வந்திருக்கிறேன் என்று பெருமையாக கூறினார். அதே போல தான் நானும் சொல்கிறேன். நானும் ஒரு அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ வரவில்லை. நானும் முன்னாள் மாணவன் என்ற உரிமையோடு கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருக்கின்றேன்.


ஒவ்வொரு காலேஜ்க்கும் ஒவ்வொரு டிபார்ட் மெண்ட் சிறப்பாக இருக்கும். ஆனால் லயோலாவில மட்டும் தான் எல்லா டிபார்ட்மெண்டும் சிறப்பாக இருக்கிறது.லயோலாவில படிக்கிறேன், படிக்க போறேன்றது மிகப் பெரிய பெருமை. மிகவும் ஸ்டிரிக்ட்டான காலேஜ் தான் லயோலா காலேஜ். இங்கு விருது வாங்கியவர்களும் விருதிற்கு தகுதியானவர்கள் தான். கல்வி பணி மட்டும் அல்ல. சமூக பணியும் தொடர வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்