- மஞ்சுளா தேவி
தஞ்சாவூர்: டெல்டா மாவட்டமான தஞ்சையில் விரைவில் விமான சேவை தொடங்கப் போவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற கோயில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில். இக் கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இத்தகு பெருமை மிக்க கோவில் அமைந்துள்ள நகரம்தான் தஞ்சாவூர். தஞ்சை சோழ அரசின் தலைநகரமாக விளங்கியது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டடக் கலைக்குப் பெயர் போனது. ஆயிரம் ஆண்டு பழமையான கோவில். இங்கு வரலாற்று சிறப்பு வாய்ந்த தஞ்சை ஓவியங்களும் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றன. தஞ்சை மாவட்டம் பாசனத்திற்கு செழுமையான பூமி.இப்படி தஞ்சை மாநகரத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புகளை காண வெளிநாட்டிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் தினசரி லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக பேருந்து போக்குவரத்து மற்றம் ரயில் போக்குவரத்து மட்டுமே உள்ளது. ஆனால் விமான சேவை இங்கு இல்லை. தஞ்சையில் பயணிகள் விமான சேவை தொடங்க நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை -புதுக்கோட்டை செல்லும் சாலையில் விமானப்படைத்தளம் உள்ளது. இந்த தளங்களில் போர் விமானங்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த விமானப் படை தளத்தின் ஒரு பகுதியில் பயணிகள் விமான போக்குவரத்து தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே தஞ்சையில் புதிய பேருந்து நிலையம் அருகே ரூபாய் 27.14 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் கட்டுமானம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த உடன் மிகப்பெரிய நிறுவனங்கள் வர உள்ளது. விமான சேவையும் வந்தால், டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு பயன் கிடைக்கும்.
இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று தஞ்சை மற்றும் ஓசூரில் விரைவில் விமான பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் டி. ஆர் .பி ராஜா கூறியுள்ளார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}