சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய ரூ.1056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டுமென ஏற்கனவே முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி மனு அளித்தார்.
கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் கடந்த 2006 ஆம் ஆண்டு 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. திட்டத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்ற நபர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நிதியாண்டிலும் இத்திட்டத்தின் கீழ் நூறு நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு தினசரி சம்பளமாக ரூபாய் 294 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் 2024 -25 ஆம் ஆண்டில் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் தினசரி சம்பளமாக ரூபாய் 294 இல் இருந்து,ரூபாய் 312 ஆக ஊதியம் உயர்வு அளித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெற்று வருகின்றனர். அதேபோல் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினர் 29 சதவீதம் குடும்பத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த இரண்டு மாதங்களாக ஊதிய நிதி பற்றாக்குறையால் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 14ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தின் நிலுவைத் தொகையான ரூ.1,056 கோடியை விடுவிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதை உடனடியாக விடுவிக்க கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்த சந்திப்பின்போது திமுக எம்.பி கனிமொழி, ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன் தீப் சிங் பேடி ஆகியோரும் உடனிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மினி பஸ்களில்.. இனி மினிமம் டிக்கெட் ரூ. 4.. அதிகபட்சம் 10 ரூபாய்.. புதிய கட்டண விகிதம் அறிவிப்பு
வெயில் தொடங்கி விட்ட போதும்.. ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3 வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு!
ஸ்ரீஹரிகோட்டாவில் செஞ்சுரி அடிக்கும் இஸ்ரோ.. நாளை 100வது செயற்கைக் கோளை ஏவுகிறது!
தலித் ஊழியரை பொய் வழக்கில் சிக்க வைத்ததாக.. இன்போசிஸ் இணை நிறுவனர் உள்ளிட்டோர் மீது வழக்கு
ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் அருகே.. ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி அன்பு!
தமிழக வெற்றிக் கழகத்தில்.. அடுத்தபடியாக.. பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க விஜய் உத்தரவு!
வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த ஒரே முதல்வர் யார் தெரியமா.. டாக்டர் அன்புமணி பேச்சு
சீமான் என்ன பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா?.. விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!
அமெரிக்கா செல்லவுள்ளார் பிரதமர் மோடி.. டிரம்ப்புடன் முக்கியப் பேச்சு.. எப்போது, எத்தனை நாட்கள்?
{{comments.comment}}