செந்தில் பாலாஜி ஜாமீன்.. அமலாக்கத்துறை கேட்ட மன்னிப்பு.. மே 6க்கு ஒத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்

Apr 29, 2024,06:59 PM IST

டெல்லி: சட்ட விரோத பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின்  ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி,  பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குப் பின்னர் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உடல் நிலை  காரணம் காட்டி அடுத்தடுத்து ஐந்து முறை ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு செய்தார். ஆனால் ஐந்து முறையும் அது நிராகரிக்கப்பட்டது. 




இந்த நிலையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார் செந்தில் பாலாஜி. இந்த மனு மீது பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த பதில் மனுவை நேற்றுதான் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. இன்று நீதிபதி அபய் ஓஹா தலைமையிலான அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தபோது, இதை செந்தில் பாலாஜி தரப்பு சுட்டிக் காட்டி, வழக்கு விசாரணையை வேண்டும் என்றே தாமதப்படுத்துகிறது அமலாக்கத்துறை என்று வாதிடப்பட்டது.


இதையடுத்து பதில் மனு தாமதத்திற்கு அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. மேலும், செந்தில் பாலாஜி விசாரணையின் போது முறையாக ஒத்துழைக்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதாலும், இவரை விடுவித்தால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதாலும் இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கதுறையின் சார்பில் வாதிடப்பட்டது.


அமலாக்கத்துறையின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மே 6ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்