3 முறை ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. சோகத்தில் செந்தில் பாலாஜி.. சுப்ரீம் கோர்ட் நிவாரணம் தருமா?

Oct 19, 2023,03:27 PM IST

சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின்  ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார்.


அடுத்தடுத்து 3 முறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாகியுள்ளன. 8 முறை அவருக்கு சிறைக் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் கதவைத் தட்டியுள்ளார் செந்தில் பாலாஜி. அங்கு அவருக்கு நிவாரணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




அதிமுக  ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் செந்தில்  பாலாஜி. அப்போது,  ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கான வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக செந்தில்  பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில் நீண்ட காலத்திற்குப் பிறகு, செந்தில் பாலாஜி திமுகவுக்கு மாறி, திமுக அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். 


கைது செய்யும் போதே செந்தில்பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்  உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய நாளங்களில் அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோர்ட் உத்தரவுடன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உடல் நலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.


இதுவரை 8 முறை அவரது சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்து இரண்டும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரி அணுகியிருந்தார். அது இன்று நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய, செந்தில்பாலாஜியின் சகோதரர் ராஜா தலைமறைவாக இருக்கும் காரணத்தினால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.


இதையடுத்து தற்போது உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் அளிக்க வேண்டும், அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டாவது செந்தில் பாலாஜிக்கு நிவாரணம் தருமா.. பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!

news

CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்