சென்னை: திமுக கூடி கலைகின்ற மேகக் கூட்டம் இல்லை; கொள்கை சார்ந்த கூட்டம்; எந்த சக்தியாலும் திராவிட முன்னேற்ற கழகத்தை அசைத்துப் பார்க்க முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டி வி.சாலையில் 85 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்ட அளவில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கூட்டம் வரும் என்று தெரியும் ஆனால் இவ்வளவு கூட்டம் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. சரி இது தான் இப்படி மாநாடு என்றால் குறைந்தது 4,5 மணி நேரமாவது மாறி மாறி பேசுவார்கள் என்றால் அதுவும் இல்லை.
சட்டுபுட்டுனு வந்த விஜய் கொடிய ஏத்தினாரு, உறுதிமொழி எடுத்தாரு, கொள்கையை அறிவிச்சாரு. 45 நிமிடங்கள் மட்டுமே பேசினாரு என்ன பெருசா பேசியிருக்க முடியும்னு யாரும் கேட்காத அளவிற்கு சொல்ல வேண்டியத அழுத்தம் திருத்தமா சொல்லிட்டு போயிட்டாரு. இவரு பேசினது என்னமோ 45 நிமிடம் .. ஆனால் அந்த பேச்சை பற்றி தான் பல மணி நேரமா எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறாங்க.
தற்போதைய அரசியல் களத்தின் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளார் தவெக கட்சித் தலைவர் விஜய். அவர் பேசிய பேச்சிற்கு அனைத்து தரப்பினர்களும் தற்பொழுது அவரவர் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய் சூசகமாக திமுகவை தாக்கிய நிலையில், தற்போது திமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். பாஜகவின் சி டீம் போல செயல்படுவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.உதயசூரியனை நட்சத்திரங்கள் எதுவும் செய்ய முடியாது என்று தமிழச்சி தங்க பாண்டியன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், திமுக என்பது ஓடி கலைகின்ற மேகக் கூட்டங்கள் கிடையாது. கொள்கை சார்ந்த கூட்டம் திமுக. எப்படிப்பட்ட புயல் மழை, வெள்ளம் வந்தாலும் அனைத்தினையும் எதிர்கொண்டு கடல் அலை முரணாக இருக்கும் போது கூட நேர்த்தியாக கரைக்கு செலுத்தும் மாலுமியாக எங்கள் தலைவர் முதல்வர் இருக்கும் வரை எந்த சக்தியாலும் திமுகவை அசைத்து கூட பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}