உடல்பருமன் குறைப்பு அறுவை சிகிச்சையின்போது இளைஞர் மரணம்.. விசாரிப்போம்.. அமைச்சர் தகவல்

Apr 25, 2024,05:57 PM IST

புதுச்சேரி: உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.


உடல் பருமன் இன்றைய பெரும்பாலான மக்களுக்கு உள்ள பிரச்சனைகளிலில் ஒன்று. ஆண், பெண் என இரு பிரிவினர்களும் இந்த உடல் பருமனால் பாதிக்கப்பட்டு அவதி பட்டு வருகின்றனர். இதற்கு பல வகைகளில் தீர்வு உண்டு என்று கூறப்பட்டாலும், அவை ஆபத்து நிறைந்தவையாகவே இருக்கின்றன. அப்படி தான் புதுச்சேரி முத்தியால்பேட்டை நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு  ஹேமசந்திரன் மற்றும் ஹேமராஜன் என 26 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். 




இவர்களில் ஹேமச்சந்திரன் உடல் பருமனாக இருப்பதால் சென்னையில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 256 கிலோ உடைய ஹேமச்சந்திரனுக்கு  நேற்று அறுவை சிகிச்சை வயிலாக உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க முடிவு செய்திருந்தனர் மருத்துவர்கள். ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கி  15 நிமிடங்களில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 


கார்டியாக் அரெஸ்ட் காரணமாக அவர் இறந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த இவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.  புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உடல் பருமனை குறைக்க சென்றவர் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த இளைஞரின் உறவினர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க உத்தரவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்