சென்னை: திமுக ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான போராட்டம் தேவையற்றது. இந்த திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற முதலமைச்சர் ஸ்டாலின் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை படவேட்டம்மன் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணிகள் மற்றும் பொதுமக்கள் பக்தர்களின் அனைத்து தேவையும் நிறைவேற்றும் அரசாக திமுக திகழ்கிறது. இதுவரை 2504 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஆதி படவேட்டம்மன் திருக்கோயில் குடமுழுக்கு வரும் மார்ச் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 3000த்திற்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
திருப்பரங்குன்றம் போராட்டத்தில் ஈடுபவர்களை இந்து அமைப்பினர் என்று குறிப்பிட வேண்டாம். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாஜகவினர் என்று தான் நாங்கள் கருதுகிறோம். திமுகவின் ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான போராட்டம் தேவையற்றது. இந்த திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற முதலமைச்சர் ஸ்டாலின் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.
திருப்பரங்குன்றம் மலையை பொறுத்தவரை 1920 ஆம் ஆண்டு மதுரை சார்பு நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன் பின்னர் 1930 ஆம் ஆண்டு லண்டன் கவுன்சில் ஒரு உத்தரவை வழங்கியது. தற்போது கூட இந்த விவகாரம் தொடர்பான இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. கடந்த காலங்களில் எந்த அடிப்படையில் நீதிமன்றங்கள் உத்தரவை வழங்கியதோ, அதன் படி இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தைக் கொண்டு அரசியல் குளிர் காயலாம் என நினைக்கின்றனர்.
நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில்தான் தமிழக அரசு செயல்படும் என அவர்களுக்கு நான் கூறிக் கொள்கிறேன். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் என்ற முறையில் முதலமைச்சர் அனுமதியுடன் விரைவில் அந்த மலைக்குச் செல்ல இருக்கிறேன். அப்பகுதியில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். தேர்தல் லாபத்திற்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக கையாளுகிறது.
பாஜகவின் இந்த நடவடிக்கையால், அவர்களது வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியம் இல்லை. பாஜகவில் இருப்பவர்கள் மதத்தால் மக்களை வேறுபடுத்துகின்றனர். ஏற்கனவே என்ன வழிபாட்டு முறை இருக்கிறதோ, அதை முறை மீண்டும் தொடரும். அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜாவிற்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம், எங்கள் முதல்வர் எங்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தி இருக்கிறார். வட மாநிலத்தை போன்று இங்கும் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கின்றீர்கள். எங்கள் முதல்வர் இங்கு கலவரம் ஏற்பட்டால் இரும்பு கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கிறதா பாஜக?.. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பரபர முடிவுகள்
இப்பவே தலை தூக்கும் வெயில்.. இன்றும், நாளையும் அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி வரை உயர வாய்ப்பு
கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. 3 ஆசிரியர்கள் அதிரடி கைது!
திருப்பரங்குன்றத்தை வைத்து.. திமுக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்த முயல்கிறது பாஜக.. அமைச்சர் சேகர்பாபு
திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் மென்மையாக இருக்கக் கூடாது.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
படகில் சென்று.. திரிவேணி சங்கமத்தில்.. 3 முறை புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி
அஜீத் ரசிகர்களே ரெடியா.. விடாமுயற்சி நாளை ரிலீஸ்.. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி
144 தடை உத்தரவு வாபஸ்.. திருப்பரங்குன்றம் மலை கோவில், தர்காவுக்குச் செல்ல போலீஸ் அனுமதி!
சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
{{comments.comment}}