சென்னை: உண்மையிலேயே எதிர்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் இருந்து நிவாரணம் பெற்று தர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி வாய்ச்சவடால் விடாமல் மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி தரட்டும். உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடிமீது சேற்றை வீசி இருக்கிறார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
சென்னையில் கடந்த காலங்களில் 13 சென்டிமீட்டர் மழைக்கே மூன்று நாட்கள் ஸ்தம்பித்திருந்த நிலையில் தற்போது மழை பெய்த 12 மணி நேரங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதற்கு, தமிழக முதலமைச்சரின் போர்க்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஃபெஞ்சல் புயல் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு மீது எதிர் கட்சிகள் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு கொடுத்து படிப்படியாக தான் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்து முன்கூட்டிய தண்ணீர் திறக்கப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் மனசாட்சியோடு பேச வேண்டும்.
உண்மையிலேயே எதிர்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் இருந்து நிவாரணம் பெற்று தர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி வாய்ச்சவடால் விடாமல் மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி தரட்டும். உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடிமீது சேற்றை வீசி இருக்கிறார்கள். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். புயலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையம் அளவிட முடியாத சூழல் இருந்தது.
புயல் போக்கு காட்டியது என்பது உண்மை தான். புயலின் தாக்கத்தை வானிலை மையமே கணிக்க முடியாமல் தான் இருந்துள்ளது. எனினும் அரசு தயார் நிலையில் இருந்ததால் தான் பெரிய உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சேதம் இருந்ததால் இரண்டு நாட்கள் சரி செய்யப்படும். திருவண்ணாமலையில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்படும். 40 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் கூடினாலும் வெற்றிகரமாக தீபத்திருவிழாவை நடத்துவோம். நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து வருங்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வங்கி கணக்கிற்கு இனி 4 பேர் வரை நாமினியாக நியமிக்கலாம் .. புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகிறார் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்.. டிச. 5ல் பதவியேற்பு
மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்.. திடீரென கைது செய்யப்பட்டது ஏன்?.. திடுக்கிடும் தகவல்கள்!
சாதிவாரிக் கணக்கெடுப்பு.. தேசியத் தலைவர்கள் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
TNSTCக்கு.. 5 வருடமாக எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை.. திமுக எம்பி கேள்விக்கு மத்திய அரசு பதில்!
திருக்குறளின் முப்பால்களையும் மையப்படுத்தும் படம்.. இசையமைக்க டக்கென ஒத்துக் கொண்ட இளையராஜா
Chennai Lakes: தொடர் மழையால் மேம்பட்ட சென்னை ஏரிகளின் நீர் இருப்பு.. சூப்பர் அப்டேட்!
அவசர சோறு ஆபத்து.. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.. உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 04, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}