களத்திற்கு வராத தற்குறி.. 200 இல்லை, 234 தொகுதிகளையும் அள்ளுவோம் .. அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!

Dec 07, 2024,05:09 PM IST

சென்னை: தமிழகத்தின் அரசியல் தெரியாமல் அறியாமையில் சிலர் கருத்து கூறி வருகிறார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. 200 தொகுதிகளில் திமுக வெல்ல முடியாது என தற்குறிகளாக சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்போது சொல்கிறேன், எங்களது இலக்கு 200 அல்ல, 234 தொகுதிகளும்தான் என்று அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆவேசமாக பதில் தெரிவித்துள்ளார்.


விகடன் பிரசுரம் சார்பில் எல்லோருக்குமான அம்பேத்கர் புத்தகம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜூனாவால் தொகுக்கப்பட்ட இந்த நூலை விஜய் வெளியிட முதல் பிரதியை முன்னாள் நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். அதன்பின்னர் விஜய் பேசுகையில், மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200ம் வெல்வோம் என்று எகத்தாளமாக முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை..  நீங்க உங்களோட சுயநலத்துக்காக எல்லா வழிகளிலும் பாதுகாத்து வரும் உங்களது கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள் என்று பேசியிருந்தார்.




இந்நிலையில், சென்னை கொளத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதிலளித்தார். அவர் கூறுகையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 என்கிற திமுகவின் நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்திற்கே வராமல் பேசிக்கொண்டு உள்ளனர். எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல, 234 தொகுதிகளையும் திராவிட முன்னேற்ற கழகம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கைப்பற்றும்,கைப்பற்றும், கைப்பற்றும். 


வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக திமுக மீது எப்படி எல்லாம் அவதூறுகள் பரப்பப்படுகிறேதா, அப்போதெல்லாம் 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திமுக தொண்டன் 100 கிமீட்டர் வேகத்தில் பயணிப்பார்கள். மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் அரியணை ஏற்றும் வரை எங்களுடைய வேகம் குறையாது என்று கூறினார்.


விக்கிரவாண்டியில் விஜய் பேசிய பேச்சு ஒரு மாதத்தையும் தாண்டி அனல் பரப்பியது. நேற்று விஜய் பேசியதை வைத்து இது எத்தனை நாட்கள் சூடாக ஓடும் என்பது தெரியவில்லை. ஆனால் படு சூடாக கிளம்பி விட்டதாகவே தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்