சென்னை: தவெக தலைவர் விஜய், தவழுகின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயங்களை ஓடி வெற்றி கண்டவர்கள் என்று தவெக தலைவர் விஜயின் விமர்சனத்திற்கு அமைச்சர் பிகே சேகர்பாபு பதில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்பின்னர் பேசிய தவெக தலைவர் விஜய், அரசியல்னா என்னங்க. ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழனும் என்று நினைக்கிற அரசியலா, இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழனுங்கிறது அரசியலா நீங்களே சொல்லுங்க. எல்லோருக்கும் நல்லது நடக்கிறது தானே அரசியல். அதுதான் நம் அரசியலும்.
காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சியை மன்னர் ஆட்சி போன்று நடத்துகின்ற நம்மளுக்கு எதிராக இவர்கள் செய்கின்ற செயல் ஒன்றா இரண்டாங்க. மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது அவர்களே.. செயலிலும் ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே.. ஒன்றியத்தில் பாஜக ஆட்சியை ஒரு பாசிச ஆட்சி என அறிவிப்புகள் அறிவித்துவிட்டு இங்கு நீங்கள் பண்ற ஆட்சி மட்டும் என்னவாம்.
அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சி தானே. ஒரு கட்சித் தலைவனா ஜனநாயக முறைப்படி என் கழகத் தோழர்களையும் எந்நாட்டு மக்களையும் பார்க்க சந்திக்க தடை விதிக்கிறதுக்கு நீங்க யாருங்க. தடையை மீறி என் மக்களை பார்க்க வேண்டும் என்று முடிவு பண்ணிட்டேனா பார்த்தே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் அமைதியாக இருக்கிறேன். நேத்து வந்தவன் எல்லாம் முதலமைச்சராக வேண்டும் என கனவு காண்கிறானு சொல்றீங்க. அது நடக்கவே நடக்காதுன்னும் சொல்றீங்க.
அப்படி எந்த கட்சிக்கும் கொடுக்காத நெருக்கடியை ஏன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும் போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். அணையை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம். ஆனால் காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் சாதாரணமான காத்து சூறாவளியாக மாறும். ஏன் சக்தி மிக்க புயலாக கூட மாறும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அமைச்சர் பிகே சேகர்பாபு பதில் தெரிவிக்கையில், மன்னராட்சி காத்த கரங்கள், மக்களாட்சி காணும் எங்கள் நெஞ்சம். எங்களாட்சி என்றும் ஆளும். சக்திமயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது. பெண்கள் தான் 2026ஆம் ஆண்டு இந்த ஆட்சியை தூக்கி பிடிப்பார்கள். முதல் அமைச்சரை வரவேற்பதில் 80 சதவீதம் பெண்கள் தான் உள்ளனர். தவெக தலைவர் விஜய், ஒரு தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று வென்றவர்கள் என்று கூறியுள்ளார்.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}