மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு அடுத்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டு நடத்தப்படும் என இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் தான். பிறகு மதுரை மல்லிகை பூ. மதுரையின் சிறந்த உணவுகளில் ஜிகர்தண்டாவும் ஒன்றாக விளங்குகிறது. மதுரைக்கு எப்போது சென்றாலும் பசி என்று இருக்ககூடாது என்ற வகையில் 24 மணி நேரமும் உணவகங்கள் திறந்திருக்கும். இதனால் தான் மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரே உண்டு.
இப்படி பல்வேறு சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதில் முக்கியமான ஒன்றுதான் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இக்கோவிலில் நடைபெறும் முளைக்கட்டு திருவிழா, மாசி திருவிழா, ஆவணி மூல வீதி திருவிழா, நவராத்திரி திருவிழா, பங்குனி திருவிழா, சித்திரை பெருவிழா என வருடத்தின் 12 மாதங்களும் விழா கோலம் பூண்டு காணப்படும்.அதிலும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவும் மிகப் பிரசித்தி பெற்றது. ஏனெனில் சித்திரை திருவிழாவில் நடைபெறும் பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவை சிறப்பு வாய்ந்தவை. இது மட்டுமல்லாமல் சிவபெருமான் செய்த 64 திருவிளையாடல்களும் மதுரையில் தான் அரங்கேறின. அதிலும் 12 திருவிளையாடல்கள் ஆவணி மூல வீதி திருவிழாவில் நடைபெறுவது என்பது மிகச் சிறப்பு.
இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. மதுரை மாநகருக்கு மத்தியில் ஓங்கி உயர்ந்து நிற்கும் மிக கம்பீரமாக காட்சியளிக்கும் நான்கு கோபுரங்களை சாலைகளில் செல்பவர்கள் தரிசிக்காமல் பயணம் செல்ல மாட்டார்கள். இதனால் உலகளவில் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் லட்சக்காண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
இப்படி வரலாற்று சிறப்புகளில் மிக முக்கிய கோயில்களை ஒன்றாக திகழும் மீனாட்சி அம்மனின் கோவில் குடமுழுக்குவிழா மதுரை மக்களின் நீண்ட நாள் கனவு. மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்றது.12 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கிழக்கு கோபுரத்திற்கு அருகே அமைந்துள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும் என்ற ஏக்கம் மதுரை மக்களிடையே நிலவி வந்ததுடன், தீ விபத்தில் சேதம் அடைந்த பகுதிகளை புராணமிக்க வேண்டும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த கடந்த ஆண்டு முதல்வர் மு க ஸ்டாலின் 25 கோடி ரூபாய் செலவில் கோயில் திருப்பணிகளும் 18 கோடி செலவில் வீர வசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். இதனையடுத்து முதற்கட்டமாக திருப்பணிகளை மேற்கொள்ள கடந்த செப்டம்பர் நான்காம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் பாலாலய பூஜை நடைபெற்றது. இதனை அடுத்து கோயிலின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைய 2026 ஆம் ஆண்டு ஆகும். அதன் அப்போதுதான் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் காலை 9.30 மணி அளவில் தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னர் கேள்வி நேரம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து அந்தந்த துறை அமைச்சர்கள் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசினார். இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது குடமுழுக்கு நடத்த தேவையான 63 பணிகளில் 40 பணிகள் நடைபெற்று வருகின்றன. வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்க 25 அடிக்கு ஒரே நீளத்தில் கற்கள் கிடைக்க சிரமம் இருந்தது. 25 அடி நீள கற்களைத் பெற ரூபாய் 19 கோடி ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}