நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கங்க, கோவிஷீல்ட் குறித்து அஞ்சாதீர்கள்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

May 12, 2024,11:39 AM IST

சென்னை:  கோவிஷீல்ட் குறித்து தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


சென்னை கோயம்பேடு பகுதியில் மக்களுக்காக நீர் மோர்ப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கோவிஷீல்ட் பக்கவிளைவுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.




அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், கோவிஷீல்ட் மட்டுமல்லாமல் அனைத்துத் தடுப்பூசிகள் குறித்தும் மக்கள் அச்சத்தோடேயே வாழும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் கோவிஷீல்ட் தொடர்பான தீவிர பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை, அப்படி தகவல் இல்லை.


பொதுவாகவே எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அதைப் போட்டுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே பின்விளைவுகள் இருக்கும். ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பெரிய அளவில் இங்கு இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பாதுகாத்துக் கொண்டாலே போதுமானது.


தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும், காலையில் நடக்க வேண்டும். நல்ல சத்துள்ள ஆகாரம் உட்கொள்ள வேண்டும். அப்படி செய்து வந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம் என்றார் மா.சுப்பிரமணியன்.


இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் என இரு தடுப்பூசிகள் போடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்