சென்னை: சுயநினைவற்றவரைப் போல பிதற்றித் திரிகிறார் அண்ணாமலை. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம். நாவடக்கம் அற்றவர், அநாகரீகமானவர் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பாஜகவிற்கும் திமுகவிற்கும் இடையே வார்த்தை போர் நடத்து கொண்டிருக்கிறது. இப்போர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்துவதுடன், தொண்டகளை உசுப்பேற்றி வருகிறது. இந்நிலையில், இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
திமுக அரசு சொல்வதை செய்யும் அரசு, சொல்வதற்கு மேலாகவும் மக்கள் சேவை செய்யும் அரசு. திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ அவர்கள் மக்களுக்கு தெரிவித்ததைப்போல், “நான் ஓட்டு போட்டவருக்கு மட்டும் முதலமைச்சரல்ல, ஓட்டு போடாதவர்களுக்கும் நானே முதலமைச்சர்”,மா.சுப்பிரமணியன் அந்த வகையில் நாம் ஏன் திமுக அரசுக்கு ஓட்டுப் போட தவறிவிட்டோம் என்று சிந்திக்கின்ற வகையில் இந்த திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று சூளுரைத்தார். கழக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இதுநாள் வரை 90% மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வில் விடியலை உருவாக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி
அவற்றில் சில, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞரின் கனவு இல்லத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும்-48, மக்களுடன் முதல்வர், தொழில்துறை 4.0 திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், இல்லம் தேடி கல்வி, இப்படி நூற்றுக்கணக்கான சிறப்புத் திட்டங்களை வரிசைப்படுத்தி கொண்டே போகும் அளவிற்கு தமிழ்நாடு மக்களின் வாழ்வில் விடியலை உருவாக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ள அரசு திமுக அரசு
அதனால்தான் அண்மையில் ‘இந்தியா டுடே’ மற்றும் ‘சி ஓட்டர்ஸ்’ அமைப்பினர் நடத்தியக் கருத்துக்கணிப்பில் கடந்தாண்டு தி.மு.கழகத்திற்கு இருந்த மக்கள் செல்வாக்கு 47 சதவிகித்திலிருந்து 52 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகவும், இப்போது மட்டுமல்ல, எப்போதும் தேர்தல் நடைபெற்றாலும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், தி.மு.கழகம் அமோக வெற்றி பெறும் என்றும், Most Popular CM in Home State எனும் தலைப்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கடந்தாண்டு பிப்ரவரி திங்களில் 36 சதவிகிதமாக இருந்த மக்கள் செல்வாக்கு, இந்தாண்டு பிப்ரவரி திங்களில் 57 சதவிகிதமாக உயர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் முதலிடத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் இடம்பெற்றிருப்பது விஞ்ஞானப்பூர்வமாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாத அரசியல் அரவேக்காடு அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து முதலமைச்சர் அவர்களையும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் அவர்களையும் ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சமாகும்.
தமிழக மக்கள் விரோத அரசியல் செய்யும் அண்ணாமலை
நீட், புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு, மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது என அனைத்திலும், தமிழக மக்கள் விரோத அரசியல் செய்யும் அண்ணாமலை தொடர்ந்து செய்யும் கேலிக்கூத்து நடவடிக்கைகளுக்கு அளவின்றி போய்கொண்டிருக்கிறது. திடீரென்று செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லி Shoe கால்களுடன் வலம் வருவது, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் கண்டு நாடே எள்ளி நகையாடுகிறது.
கார்ப்பரேட்களுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் ஆதரவாக அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு திராவிட மாடலைப் பற்றியும், முதலமைச்சர் அவர்களை பற்றியும், துணை முதலமைச்சர் அவர்களை பற்றியும் பேசுவதற்கு எந்தவிதமான தகுதியும், அருகதையும் இல்லை.
நாவடக்கம் அற்றவர், அநாகரீகமானவர் அண்ணாமலை
துணை முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் போன்ற அமைச்சர் பெருந்தகைகளை ‘தற்குறி’ என்று சொல்லுமளவுக்கு, கீழ்த்தரமாகவும், தற்குறித்தனமாகவும் செயல்படும் அண்ணாமலை நிலைக் கண்ணாடி முன்நின்றால் தன்னுடைய தற்குறித்தனங்கள் ஒவ்வொன்றாய் வரிசைக்கட்டி நிற்கும். நாவடக்கம் அற்றவர், அநாகரீகமானவர் என்பதை இடைவெளியில்லாமல் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கிற அண்ணாமலை. ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பது நிதர்சனம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!
2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!
தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!
பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!
சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!
அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?
தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்
சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!
{{comments.comment}}