வாழ்க்கையில் முன்னாடி போகணும்.. வாக்கிங்கில் பின்னாடியும் போகலாம்.. மாஸ் காட்டும் "மாசு"!

Oct 26, 2023,09:30 AM IST

சென்னை: வாக்கிங்கில் பலருக்கும் பேராசனாக மாறி வருகிறார் நம்ம சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம்.


Health awareness இன்று மக்களிடையே அதிகமாகி வருகிறது. இதற்குக் காரணம், வகை வகையாக சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொண்டு விட்டு பிறகு உடம்பைக் குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளிட்டவற்றை கட்டுக்குள் வைக்கவும்தான் பலர் வாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை நாடுகிறார்கள் என்றாலும் கூட பலருக்கு அதெல்லாம் வராமல் தடுக்கும் விழிப்புணர்வு கூடியுள்ளதும் கூட ஒரு காரணமாகும்.


நம்மை நேசிக்க வேண்டும்..அதை விட நமது உடம்பை ரசிக்க வேண்டும். சுவர் இருந்தால்தானே சித்திரம்.. நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தால்தானே எல்லாமே சாத்தியம் என்ற விழிப்புணர்வும் மக்களிடையே இன்று அதிகரித்துள்ளது. இதுவும் கூட அவர்கள் வாக்கிங், ஜாகிங், ஜிம்முக்குப் போவது என்று கிளம்பி விட்டன. அந்த வகையில் இந்தக் காலத்துக்காரர்களை சற்று பாராட்டலாம்.




பலருக்கும் வாக்கிங், ஜாகிங்கில் ஒரு உதாரண புருஷராக இருப்பவர்தான் நம்ம மா.சுப்ரமணியம். இவரைப் போல விடாமல் ஜாகிங், வாக்கிங் போவோர் வெகு அரிதுதான். பலர் இருப்பார்கள்.. ஆனால் இவர் பலருக்கு முன்னோடியாக இருக்கிறார். எந்த ஊரில் இருந்தாலும் சரி... ஓடி விடுவார்.. அதாவது ஜாகிங் போய் விடுவார். வாக்கிங், ஜாகிங் இல்லாமல் இவரது ஒரு நாளும் முடிவடையாது.


இந்த நிலையில் ஒரு வித்தியாசமான வீடியோவைப் போட்டுள்ளார் மா.சுப்ரமணியம். அதாவது பின்னோக்கி நடக்கிறார். அதுவும் சற்று வேகமாக. இது நமது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பார்கள். அதாவது குறுகிய நேரத்தில் அதிக அளவிலான கலோரிகளை இது குறைக்கும். வழக்கமாக முன்னோக்கி நடக்கும்போது உடல் உழைப்பு என்பது குறைவாக இருக்கும். ஆனால் பின்னோக்கிப் போகும்போது நிறைய எனர்ஜி தேவைப்படும்.. எனவே அதிக அளவிலான கலோரிகள் வேகமாக குறையும். எனவே அது கூடுதல் பலனையும் கொடுக்கும்.


இந்த வீடியோவைப் போட்டுள்ள அமைச்சர் மா.சுப்ரமணியம், வாழ்க்கையில் முன்னோக்கிதான் போகணும்.. ஆனால் வாக்கிங்கில் பின்னோக்கியும் போகலாம் என்று ஜாலியாக எழுதியுள்ளார்.. சூப்பர்ல!


அப்புறம் முக்கியமான விஷயம்.. பின்னோக்கி  நடக்கும்போது நன்கு பிராக்டிஸ் செய்து கொண்டு செய்யுங்கள்.. நீங்கள் செல்லும் சாலை அல்லது டிராக் சீராக இருக்க வேண்டியது அவசியம். வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையில் இதைச் செய்யாதீர்கள். தனியாகவும் இதைச் செய்யாதீர்கள். உடன் ஒருவர் இருப்பது நல்லது. பின்னோக்கி நடக்கும்போது கால்கள் தடுமாறச் செய்யும்.. எனவே முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டு, துணைக்கு ஒருவரை வைத்துக் கொண்டு, சரியான இடத்தில் இதைச் செய்வது நல்லது.


Happy exercising மக்களே!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்