திமுக கூட்டணியில் பிளவு வந்து விடாதா என பலரும் காத்திருக்கின்றனர்.. அமைச்சர் அன்பில் மகேஷ்

Dec 07, 2024,05:09 PM IST

சென்னை: திமுக கூட்டணியில் பிளவு வந்து விடாதா என்று பலரும் காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு இடமில்லை. திருமாவளவன் மிகப்பெரிய தலைவர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஆரம்பித்த நடிகர் விஜய் திமுகவை தான் எதிர்க்கப்போவதாக விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் தெரிவித்தார். அதனை அடுத்து நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் 2வது முறையாக அவர் அரசியல் பேசினார். 




அப்போது, மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200ம் வெல்வோம் என்று எகத்தாளமாக முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை..  நீங்க உங்களோட சுயநலத்துக்காக எல்லா வழிகளிலும் பாதுகாத்து வரும் உங்களது கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளன் அவர்கள் அவங்களால இன்னிக்கு வர முடியாமப் போச்சு. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக விழாவில் கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் எத்தனை பிரஷர் இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தாலும் நான் இப்ப சொல்றேன்.. அவருடைய மனசு முழுக்க முழுக்க இங்க நம்மளோடதான் இருக்கும் என்று பேசினார் விஜய்.


இந்த பேச்சு தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான திமுக அமைச்சர்கள் விஜய் பேசியதற்கு பதில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் பேசியது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், திமுக கூட்டணியில் பிளவு வந்து விடாதா என்று பலரும் காத்திருக்கின்றனர். அதற்கு இடமில்லை. திருமாவளவன் மிகப்பெரிய தலைவர். சுயமரியாதைக்காரர். அப்படியெல்லாம் அழுத்தம் கொடுத்து அவரை வேலை செய்ய வைக்க முடியாது. அவரை மதிக்கக்கூடியவர்களாக தான் நாங்கள் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

அதிகம் பார்க்கும் செய்திகள்