முதல் படத்திலேயே 10.. காரைக்கால் மில்லத் அகமது செம கெத்து.. ரங்கசாமியே பாராட்டிட்டாரே!

Feb 16, 2024,01:46 PM IST

சென்னை: தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முதலில் ஒரு சாதனை படைத்துள்ளார் மில்லத் அகமது. இவர் செய்த சாதனை என்ன தெரியுமா? தனது முதல் படத்திலேயே 10 துறைகளை கையாண்டு சாதனை படைத்துள்ளார்.


காரைக்காலைச் சேர்ந்த சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் மில்லத் அகமது. இவர் என்ற  "ஆந்தை" என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.  இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் இவர், "நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், பாடல், பாடலுக்கு குரல், பின்னணி குரல், நடனம், தயாரிப்பு மற்றும் இணை இயக்கம்" என தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் படத்தில் பத்து துறைகளை கையாண்டவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


இந்தச் சாதனையைப் பாராட்டி லண்டன் உலக சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியா உலக சாதனைப் புத்தகம்  அங்கீகரித்து பதிவு செய்து உலக சாதனையாளர் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். புதுச்சேரி மாநிலத்திலிருந்து திரைப்படத் துறையில் சாதித்தவர் என்ற பெயரும் பெற்றுள்ளார் மில்லத் அகமது. புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது ஆந்தை திரைப்படம் வெற்றி பெற்று, மேலும் பல நல்ல திரைப்படங்களைத் தரவேண்டும்" என்று வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார். மில்லத் அகமது 2021ஆம் ஆண்டு ஐந்து வார்த்தையில் சிறுகதை எழுதி உலக சாதனைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




இது குறித்து மில்லத் அகமது பேசுகையில், முதலில் ஆந்தை திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இணை இயக்கம் என ஐந்து துறைகளை மட்டுமே கவனித்தேன். "ஊத்து ராவா" பாடல் பதிவின்போது இசையமைப்பாளர் ராம் அவர்கள் பாடலில் வரும் வசனங்களை என்னைப் பேச சொன்னார். பேசினேன் நன்றாக இருந்ததால் அப்படியே வைத்துக் கொண்டோம். பிறகு பாண்டிச்சேரியில் சில காட்சிகளும், ஒரு பாடல் காட்சியும் படம்பிடிக்க வேண்டியிருந்தது. அதற்கு இயக்குநரால் வர இயலாத சூழ்நிலையால் நான் சென்று இயக்கினேன். அப்போது சைக்கோ பாடலுக்கு நானே நடனம் அமைத்தேன்.

நன்றாக வந்திருக்கிறது படம் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். 


பிறகு டப்பிங் பேசும் போது ஒரு போலிஸ் கேரக்டர், ஒரு பைக்காரர், டெலிபோன் குரல், பெண் பற்றிய வசனம் மற்றும் சுகாதார அறிவுரையும் பேசியுள்ளேன். இந்த படத்தில் நடித்தும் இருக்கிறேன். ஆக ஒன்பது துறைகள் வந்துவிட்டது. இறுதியாக இந்தத் திரைப்படத்தில் ஆரம்பத்தில் இருந்த தயாரிப்பாளர்களால் தொடர்ந்து பயணிக்க இயலாத காரணத்தால் நானே தயாரிப்பாளர் ஆகிவிட்டேன். 


படத்தை முடித்தப்பிறகு பார்த்தால் 10 துறைகளையும் கவனித்து விட்டேன். பொதுவாக முதல் படத்தில் நான்கு அல்லது ஐந்து துறைகள் மட்டுமே கவனிப்பார்கள். இதனை லண்டன் உலக சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியா உலக சாதனைப் புத்தகம் ஆகியவற்றிற்கு தெரிவித்தோம். அவர்கள் ஆய்வுசெய்து இறுதியில் இந்தச் சாதனையை அங்கீகாரம் செய்தார்கள் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்