தமிழகத்தில் பால் விலை உயர்வு.. ஆனால் ஆவின் பால் கிடையாது.. பயப்படாதீங்க மக்களே!

Nov 08, 2024,04:10 PM IST

சென்னை: தமிழகத்தில் தனியார் பால் நிறுவனமான ஆரோக்கியா பால் இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


மக்களின் அத்தியாவசிய பொருட்களுள் மிகவும் முக்கியமானதாக இருப்பது பால். இந்த பால் அரசு தயாரிக்கும் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன. தமிழகத்தில் மட்டும் ஆவின்பால் தினமும் 18 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் மட்டும் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது.




இருப்பினும், ஆவின் பாலை விட தனியார் நிறுவனங்களின் பால் விலை அதிமாகவே உள்ளது. இந்த நிலையில்தான் ஆரோக்கியா பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. ஆவின் பாலை அடுத்து மக்கள் அதிகமாக வாங்கும் பால் என்றால் அது ஆரோக்கியா தான். ஏற்கனவே ஒரு லிட்டர் 65 ரூபாய்க்கு விற்கப்பட்ட பால் இன்று முதல் 67 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பால் மட்டும் இன்றி தயிர் உள்ளிட்ட மற்ற பொருட்களின் விலையும் உயர்த்தியுள்ளது. 


இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பால் விலை உயர்விற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆரோக்கியா நிறுவனத்தின் பால் விலை உயர்வு தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட  அண்டைய மாநிலங்களிலும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்