கோயம்புத்தூர்: மிலாடி நபியை முன்னிட்டு கோயம்புத்தூர் உக்கடம் பள்ளிவாசலில் 50 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
பிரியாணி என்ற சொல்லை கேட்டவுடனே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும்.. அப்டியே தட்டு நிறைய ரைஸை அள்ளிப் போட்டு, நடுவுல கொஞ்சம் வாய்க்காய் வெட்டி.. அதுல கத்திரிக்காய் கூட்டை ஊத்தி.. கூடவே கொஞ்சம் ரெய்த்தாவையும் ஓரமா போட்டுக்கிட்டு.. பிரியாணிக்குள் புதைந்திருக்கும் அந்த லெக் பீஸை அப்படியே லாவகமாக உள்ளே இருந்து உருவி எடுத்து, வாயில் வச்சு ஒரு கடி கடிச்சு.. கூடவே பிரியாணியை எடுத்து வாயில் வச்சு சுவைக்கும்போது கிடைக்கும் பாருங்க ஒரு சுகம்.. ஆஹாஹஹா.. சொர்க்கம்!
அத்தகைய சக்தி படைத்தது தான் பிரியாணி. எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பே வராத உணவு பிரியாணி. இன்றைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேடி தேடி சுவைத்து சாப்பிடுவது பிரியாணியை தான் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு பிரியாணி பைத்தியம் பிடித்தவர்கள் இந்த நாட்டில் அதிகம். புரட்டாசி மாதத்தில் கூட பிரியாணியா.. வாய்யா வாய்யா என்று வாய் நிறைய வரவேற்று ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள்தான் அதிகம்.
அப்பேர்பட்ட பிரியாணியை தான் கோவை உக்கடத்தில் உள்ள பள்ளிவாசலில் இலவசமாக வழங்கி உள்ளனர். இன்று மிலாடி நபி என்பதால், இதை முன்னிட்டு, மறக்க முடியாத அளவிற்கு பிரியாணியை செய்து கொடுத்து கோவை மக்களை அசத்தியுள்ளனர் நம் பாய்மார்கள். 50 அடுப்புகளில் 1500 கிலோ அரிசியை கொண்டு பிரியாணி தயாரித்துள்ளனர். அவ்வளவு பிரியாணியையும் மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக அழகாக அதை வழங்கியுள்ளனர்.
அடிதடி, சண்டை எதுவும் இன்றி அமைதியான முறையில் வழங்கி மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இப்பிரியாணியை சாதிமதம் போதமின்றி அனைவருக்கு கிடைக்கும் விதமாக வழக்கி அசத்தினர் என்பதுதான் சூப்பர் மெசேஜ். இப்படிப்பட்ட அன்பும், பிரியமும் பந்தமும் இருக்கும் வரை எவரையும், எவரிடமிருந்தும் பிரிக்கவே முடியாது..!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
{{comments.comment}}