"Of course, They are Microsoft employees".. சூப்பரா இருக்கே ஆபீஸ்.. பார்க்கவே பொறாமையா இருக்கேப்பா!

Feb 14, 2024,08:35 PM IST

ஹைதராபாத்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ கலகலப்பையும், கூடவே பலருக்குப் பொறாமையையும் ஏற்படுத்தியுள்ளது.


மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள் எந்த அளவுக்கு வசதிகளையும், சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள் என்பதை சித்தரிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு கலவையான ரியாக்ஷனும் கிடைத்து வருகிறது.


உண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேலைக் கலாச்சாரம் பிரமாதமானது என்பதில் சந்தேகம் இல்லை.  என்னதான் வேலைப்பளு பெருமூளையைப் பிதுக்கி.. சிறுமூளையை அழுத்தி எடுத்தாலும் கூட.. அருமையான கேம்பஸ், ஆரோக்கியமான வேலை சூழல், நல்ல சம்பளம், சிறந்த பொழுதுபோக்கு வசதிகள், ரிலாக்ஸ்டாக வேலை பார்க்கக் கூடிய வாய்ப்புகள்,  ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷன், ஹைபிரிட் வேலை சலுகை என சொல்லிக் கொண்டே போகலாம்.




மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை என்றாலே விரும்பிப் போகும் அளவுக்கு சிறப்பான சூழலுடன் கூடிய நிறுவனம் அது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியிட்டுள்ள வீடியோவைப் பார்த்துப் பலரும் "ச்ச.. வாழ்றானுகடா" என்று பொறாமைப்பட்டு இரண்டு காதுகளிலிருந்தும் புகை வரும் அளவுக்கு இருக்கிறது.


அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு சாப்ட்வேர் டெவலப்மென்ட் என்ஜீனியர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உள்ள சிறப்பம்சங்களை பலரும் பகிர்ந்துள்ளனர். ரொம்பல்லாம் சீன் இல்லை.. ஆளுக்கு ஒரு வரிதான்.. ஒவ்வொரு வரியிலும் மைக்ரோசாப்ட்டின் முகவரியைப் பதித்துள்ளனர்.. இவ்வளவுதான் அந்த ரீல் வீடியோவில் இருக்கிறது.


ஹைதராபாத்தில் உள்ள 54 ஏக்கர் பரப்பளவிலான மைக்ரோசாப்ட் கேம்பஸில் வைத்து இந்த ரீலைச் செய்துள்ளனர். பிரமாண்டமான கேம்பஸ், அட்டகாசமான ரெஸ்டாரென்ட், காபி பிரேக், ஒர்க் பிரம் ஹோம் உள்ளிட்ட வசதிகளை அவர்கள் விவரித்துள்ளனர். கம்பெனி வழங்கும் டி சர்ட்டுகளைக் கூட பெருமையாக சொல்லியுள்ளனர். "ஒர்க் லைப் பேலன்ஸ்" குறித்து சந்தோஷமாக சொல்கிறார்கள். "நேப் பே"விலிருந்து ஒரு பெண் ஊழியர் எட்டிப் பார்த்து, தூங்குவதற்குக் கூட அலுவலகத்தில் வசதி இருப்பதாக கூறியுள்ளார். ஏஐ முதல் கேமிங் வரை எல்லா வேலையும் பார்ப்பதாக ஒருவர் ஜாலியாக பேசுகிறார்.


பார்மசி.. ஆம்புலன்ஸ்.. ஆம்பி தியேட்டர்..!


இந்த அலுவலக வளாகத்தில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதி இருக்கிறதாம். பார்மசியும் இருக்கிறதாம். 800 பேர் அமரக் கூடிய ஓபன் ஆம்பி தியேட்டரும் இந்த வளாகத்தில் உள்ளது.  குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள், பேருந்திலேயே வைபை வசதி, வங்கிகள், ஏடிஎம் மையங்கள், ஜிம், யோகா செய்ய வசதி, ஏரோபிக் வகுப்புகள் என இந்த வளாகத்தில் இல்லாத வசதியே கிடையாதாம்.


இந்த வீடியோவுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனமே கமெண்ட் போட்டுள்ளது. அதில், "It's a post by our Microsoft employees, ofcourse it's gonna be wholesome!" என்று அந்த கமெண்ட்டில் உள்ளது.


வழக்கம் போல கலவையான கமெண்ட்டுகள் வந்து குவிந்துள்ளன. ஒருவர், "We are not Microsoft employees of course we are very jealous," என்று கலாய்த்துள்ளார்.  இன்னொருவரோ,  "Ofcourse you have windows in Microsoft's office and Microsoft office in windows" என்று லந்தடித்துள்ளார்.


இதை விட வேற லெவல் கூவல் ஒன்று இருக்கிறது.. அது என்ன தெரியுமா..  "I'm a Google employee Of course I go to the office only for food.".. செமல்ல!


அதையெல்லாம் விடுங்க, அடுத்த "லே ஆஃப்"பின்போது, இந்த ரீலில் உள்ள யாருக்கும் வேலை போகாது என்று கண்டிப்பாக நம்புவோம்.. பிரார்த்திப்போம்!

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்