சென்னை: கூத்தாடி என்ற சொல்லை சுக்கு நூறாக உடைத்து புரட்சி படைத்தவர் எம்ஜிஆர் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், என திரளானோர் கலந்து கொண்டு எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அக்கட்சி சார்பில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர்.
அதேபோல் எம்ஜிஆரின் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் மற்றும் பலர் கலந்து கொண்டு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தி கிரேட் எம்ஜிஆர் என்ற வீடியோவை வெளியிட்டு புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் எம்ஜிஆருக்கு பிறந்தநாள் வணக்கம் செலுத்தினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம் என பதிவிட்டுள்ளார் விஜய்.
தவெகவின் முதல் மாநில மாநாட்டில் விஜய் பேசும்போது கூத்தாடி என்று சிலர் கேவலமாக பேசுகிறார்கள். கூத்தாடின்னா என்ன என்று ஆவேசமாக பேசியிருந்தார். சமீபத்தில் கூத்தாடி என்று சில கட்சித் தலைவர்கள் விஜய்யை கூத்தாடி என்று விமர்சித்துப் பேட்டி கொடுத்து வந்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் தற்போது எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி அவர் விடுத்த வாழ்த்துச் செய்தியில் கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர் என்று கூறி விமர்சகர்களுக்கும் ஒரு குத்து குத்தியுள்ளார் விஜய் என்று பேசப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வச்சு செய்யும் குட் பேட் அக்லி.. டிராகன் வசூலைத் தாண்டியது.. தியேட்டர்களில் தொடர்ந்து செம கூட்டம்!
அதிக வயதில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மகேந்திர சிங் தோனி
அமர்நாத் யாத்திரைக்கான.. முன்பதிவு தொடங்கியது.. 533 வங்கிக் கிளைகளில் சிறப்பு ஏற்பாடு
பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்
கோடை விடுமுறை... 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
பழம்பெரும் கோவில்கள்.. வீரத்தின் விளை நிலம்.. கலைகளின் தாயகம்.. நம் தாய்த் திரு தமிழ் நிலம் (2)
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!
அனுமதி இல்லாமல் பாட்டை பயன்படுத்திய.. அஜித் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்
நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி
{{comments.comment}}