காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில்.. தொடரும் கனமழை.. மேட்டூருக்கு 1 லட்சம் கன அடி வரை நீர் வர வாய்ப்பு!

Jul 20, 2024,05:48 PM IST

சென்னை:  காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது.  தற்போது விநாடிக்கு 53,098 கன அடி என்ற அளவில் நீர் வந்து கொண்டுள்ளது.


கர்நாடக மாவட்டம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் காவிரி அணைக்கு நீரின் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது‌. குறிப்பாக தல காவிரியில் கடந்த 12 மணி நேரத்தில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கே ஆர் எஸ், ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணை பகுதிகளில் தலா 7 சென்டிமீட்டர் மழையும், கபினி அணை பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழையும், பெய்துள்ளது. 


கேஆர்எஸ் எனப்படும் கிருஷ்ண சாகர் அணையின் நீர்மட்டம் 114 அடி ஆகும். தற்போது இந்த அணையில் விநாடிக்கு 40000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 5000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையின் நீர்மட்டம் 63 அடி ஆகும். தற்போது அணைக்கு விநாடிக்கு 43 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 47 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது அதேபோல் ஹாரங்கி அணையிலிருந்து விநாடிக்கு 20000 கன அடி நீரும், ஹேமாவதி அணையிலிருந்து‌ 26,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது




கன மழை தொடரும்


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அடுத்த 10 முதல் 14 நாட்களுக்கு கனமழை தொடரும் என  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன்படி கிருஷ்ணர் சாகர் அணையின் நீர்மட்டம் நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில், இந்த அணையிலிருந்து அதிகபட்சம் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனை அடுத்து மேட்டூர் அணைக்கு மிக விரைவிலேயே விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வர வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தொடர் மழை காரணமாக காவிரி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 61.81 அடியாக இருந்த நிலையில், மேலும் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை மேட்டூர் அணைக்கு  வினாடிக்கு 53,098 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 62 அடியை நெருங்கி வருகிறது. 


காவிரியில் தொடர்ந்து நீர் வரத்து அபரிமிதமாக இருக்கும் பட்சத்தில் அணை நிரம்புவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். மேட்டூர் அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடியாகும்.

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்