சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் எடுக்கப்படவுள்ளனர்.
தலைமைப் பொது மேலாளர், பொது மேலாளர், துணைத் தலைமைப் பொது மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப ஜூலை 10ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலமாகவே இப்பணிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
அனைத்துப் பணிகளுக்கும் பிஇ அல்லது பிடெக் படிப்பு ஏதாவது ஒன்றைப் படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் அனுபவம் வித்தியாசப்படும், வயது வரம்பும் வித்தியாசப்படும். ஒரே ஒரு தலைமைப் பொது மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு வயது வரம்பு அதிகபட்சம் 55 ஆக இருக்க வேண்டும். ரயில்வே அல்லது மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தது 25 வருட கால அனுபவம் இருக்க வேண்டும்.
பொது மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு குறைந்தபட்சம் 20 வருட கால அனுபவம் இருக்க வேண்டும். பிஇ அல்லது பிடெக் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 45 ஆகும்.
மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க பி.இ, பி,டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க 38-க்குள் வயதுக்குள் இருக்க வேண்டும்.
துணை மேலாளர் பதவிக்கு 35 வயதும், உதவி மேலாளர் பணிக்கு 30 வயதும் உச்சவரம்பமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளுக்கும் பிஇ அல்லது பிடெக் படிப்பு அவசியமாகும்.
தேர்வு முறை:
தலைமைப் பொது மேலாளர், பொது மேலாளர், துணைத் தலைமைப் பொது மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர், மேலாளர் ஆகிய அனைத்துப் பணிகளுக்கும் எழுத்துத் தேர்வு கிடையாது. தகுதியுடையவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப் படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்பதாரர்கள் https://chennaimetrorail.org/job-notifications/ இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க ஜூலை 25ம் தேதி கடைசி நாள் ஆகும்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}