வாவ்.. இது சூப்பர்.. மெட்ரோவும் ஓடும்.. கூடவே "லைட்"டும் குடுகுடுன்னு ஓடி வரும்!

Sep 06, 2023,11:43 AM IST
சென்னை: சென்னை மாநகரின் போக்குவரத்து அம்சங்களில் புதிதாக மெட்ரோ லைட் சேவை இணையப் போகிறது.

சென்னை மாநகரில், பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மெட்ரோ லைட் திட்டத்தை அமல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2.50 லட்சம்  பேரிடம் இதுதொடர்பாக நேரடியாக கருத்து கேட்டு முடிவெடுக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டுள்ளதாம்.



சென்னையைப் பொறுத்தவரை சாலைப் போக்குவரத்து தவிர்த்து புறநகர் ரயில் சேவை, மாடி ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவை ஆகிய மூன்று முக்கிய பொதுப் போக்குவரத்தும் மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. இதில் லேட்டஸ்டாக இணைந்த மெட்ரோ ரயில் சேவை தற்போது மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது.  இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையுடன்  லைட் மெட்ரோ திட்டமும் இணையவுள்ளது. 

மக்கள் மெட்ரோ ரயில் சேவையை அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். என்னதான் மெட்ரோ ரயிலில் பயண கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக செல்லவும், நெரிசல் இன்றி செல்வதற்கும் ஏதுவாக மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இதனால் மெட்ரோ ரயிலில்  பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகின்றது. சென்னை மாநகரப் போக்குவரத்துகளில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கின்றது.



இதையடுத்து அடுத்த கட்டமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ லைட் சேவையை அறிமுகப்படுத்தப் போகிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் இயக்கப்பட்ட டிராம் வண்டிகளின் நவீன வடிவமே இந்த மெட்ரோ லைட் ஆகும். மெட்ரோ லைட் ரயில்கள் மிதமான வேகத்தில் செல்லும். எனவே இயக்குவது எளிதானது. செலவும் குறையும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தியாகராய நகர், அண்ணா நகர், கோயம்பேடு  போன்ற பகுதிகளில் மெட்ரோ லைட் சேவையை தொடங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்பு அண்ணா சாலையில் டிராம் சேவை இருந்தது. அதேபோல எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளிலும் டிராம் சேவை இருந்தது. ஆனால் காலப் போக்கில் அது காலாவதியாகி விட்டது. கொல்கத்தாவில் மட்டுமே இன்று வரை டிராம் சேவை இருக்கிறது.  இப்படிப்பட்ட நிலையில் சென்னையில் மீண்டும் டிராம் சேவை நவீன வடிவில் மெட்ரோ லைட் ரூபத்தில் வருவது மக்களை குஷிப்படுத்தியுள்ளது.

சுரங்கம் மற்றும் உயர்மட்ட பாதை இல்லாமல் சாதாரணமாக சாலையிலேயே செல்லும் வகையில் மெட்ரோ லைட் ரயில்கள் இருக்கும்.  சாலை ஓரத்தில் அல்லது மையப் பகுதியில் இதற்கான பாதைகள் அமைக்கப்படும். யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் இது செயல்படுத்தப்படும். மக்களுக்கும் தங்களது இருப்பிடத்துக்குப் பக்கத்திலேயே ரயில் சேவை கிடைக்கும். மேலும் இந்த மெட்ரோ லைட் சேவைகளை மெட்ரோ சேவைகளுடனும் இணைப்பார்கள். எனவே ஒரு இடத்திலிருந்து தாங்கள் விரும்பும் இடங்களுக்கு மக்கள் எளிதில் போக முடியும்.

நெல்லையைப் போல

சென்னையில் மெட்ரோ சேவை சிறப்பாக செயல்படுவதால் பிற பெருநகரங்களான கோயம்பத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நெல்லையில் மட்டும் மெட்ரோவை செயல்படுத்துவது கடினம் என்றும், அதற்குப் பதில் மெட்ரோ லைட் சேவையை தொடங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இடவசதி தோதில்லாமல் இருப்பதால் அங்கு மெட்ரோ லைட் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நெல்லையைத் தொடர்ந்து தற்போது சென்னையிலும் லைட் சேவை வரவிருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!

news

CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்