இன்ஸ்டாகிராம் போலவே.. வாட்ஸ்ஆப்பிலும் ரீஷேர் ஆப்ஷன்.. மெட்டாவின் மெகா திட்டம்!

Oct 08, 2024,03:27 PM IST

கலிபோர்னியா:   உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான மெட்டா நிறுவனம் தற்போது இன்ஸ்டாகிராமில் இருப்பதைப் போன்றே ஸ்டோரியை ரீஷேர் செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப்பிலும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 




இன்ஸ்டாகிராம், whatsapp, பேஸ்புக், மற்றும் திரட்ஸ் போன்ற பல்வேறு இணைய தள சேவைகளை மெட்டா நிறுவனம்  வழங்கி வருகிறது. மெட்டாவின் திரெட்ஸ் அறிமுகமானபோது பெரும் அலையை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கில் டவுன்லோட் செய்யப்பட்டது அந்த ஆப். ஆனால் பின்னர் அது மவுசு இழந்து போனது. இந்த நிலையில் வாட்ஸ்ஆப்பில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது மெட்டா.


சமீபத்தில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வைக்கும் வீடியோ அளவை 30 விநாடிகளிலிருந்து 1 நிமிடமாக அதிகரித்தது வாட்ஸ் ஆப். மேலும் வாட்ஸ்ஆப் ஸ்டேடட்டஸை லைக் செய்யும் அம்சத்தையும் அது அறிமுகப்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது இன்ஸ்டாகிராமில் இருப்பதைப் போல ஸ்டோரியை ரீஷேர் செய்யும்  அம்சத்தை வாட்ஸ் ஆப்பிலும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது மெட்டா நிறுவனம்.


சமீபத்தில் பேஸ்புக் நிறுவனரும் மெட்டா நிறுவனத்தின் செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கபர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 343 கோடி டாலர் அளவுக்கு உயர்ந்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி உலக பணக்காரர் பட்டியல் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார் என்பது நினைவிருக்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்