Medical miracle... பெண்ணின் அடி வயிற்றில் வளர்ந்த குழந்தை.. பிரான்சில் அதிசயம்!

Dec 14, 2023,05:42 PM IST

பாரிஸ்:  "Medical miracle" என்று நாம் அடிக்கடி ஜாலியாக கலாய்ப்போம் இல்லையா.. ஆனால் நிஜமான மெடிக்கல் மிராக்கிள் சம்பவம்.. பிரான்சில் நடந்துள்ளது. ஒரு பெண்ணின் அடி வயிற்றில் சிசு வளர்ந்தது தெரிய வந்து மருத்துவர்கள் வியப்படைந்துள்ளனர்.


அதிர்ஷ்டவசமாக, பாதுகாப்பாக டெலிவரி செய்து குழந்தையையும் தாயையும் காப்பாற்றியுள்ளனர் டாக்டர்கள்.


மருத்துவ உலகில் அவ்வப்போது சில அதிசயங்கள் நிகழும். அப்படிப்பட்ட அதிசயம் தான் தற்போது பிரான்ஸில் நடந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ரீயூனியன் தீவைச் சேர்ந்த  37 வயதுடைய பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வயிறும் வீங்கத் தொடங்கியது. இதையடுத்து அவர்  சிகிச்சைக்காக பிரான்ஸ் சென்றுள்ளார். 


பிரான்ஸ் மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு முழுமையான பரிசோதனைகளைச் செய்தனர். அப்போதுதான், அந்தப் பெண்ணின் அடி வயிற்றில் கரு வளர்ந்திருந்தது தெரியவந்தது. இவ்வாறு வளரும் கரு மருத்துவ உலகில் "எக்டோபிக் கர்ப்பம்" என அழைக்கப்படும். இவ்வாறு ஆபத்தான இடத்தில் வளரும் கரு பெரும்பாலும் பிழைக்காது, இறந்து விடுவது வழக்கம். 




ஆனால் இந்த பெண்ணிற்கு அந்த கரு 29 வது வாரமாக வளர்ந்திருந்தது. இதையடுத்து அந்த குழந்தையை பாதுகாப்பான முறையில் டெலிவரி செய்து வெளியே கொண்டு வந்தனர் மருத்துவர்கள். 3 வாரங்கள் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் இருந்த குழந்தையும் அந்த பெண்ணும் தற்பொழுது நல்ல முறையில் வீடு திரும்பியுள்ளனர்.


வழக்கமாக இதுபோன்ற இயற்கைக்கு மாறான கர்ப்பத்தின்போது வயிறு உப்பி பல பிரச்சினைகளை தாய்மார்கள் சந்திக்க நேரிடும். குறிப்பாக வயிற்றுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் சிசு உயிரிழப்பது இயல்பானது. ஆனால் அதிர்ஷ்வடசமாக இப்பெண்ணின் குழந்தை உயிர் தப்பியுள்ளது. அதை விட முக்கியமாக பத்திரமாக வெளியேயும் வந்து விட்டது.


ஆனால் இதுபோல அரிதான கருத் தரிப்பு புதிதல்ல என்றும், இதற்கு முன்பு ஒரு பெண்ணின் கல்லீரலில் சிசு வளர்ந்த சம்பவம் நடந்துள்ளதாக, இந்த அரிய பிரசவத்தைப் பார்த்த மானிடோபா நகரின் சிறார் மருத்துவமனை ஆய்வுக் கழகத்தின் டாக்டர் மைக்கேல் நார்வே கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்