"டிச. 14 வாங்க நண்பா"..  விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 25 இடங்களில் மருத்துவ முகாம்!

Dec 12, 2023,01:14 PM IST

சென்னை: மிச்சாங் புயல் பாதிப்பு  ஏற்படுத்திய பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம் டிசம்பர் 14ம் தேதி நடத்த நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.


மிச்சாங் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. சில இடங்களில் வெள்ள நீர் வீட்டு பகுதிகளில் இன்னும் கூட தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் காய்ச்சல், இருமல்,சளி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பொதுமக்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இலவச முகாம் டிசம்பர் 14 (நாளை மறுநாள் )  நடைபெற உள்ளது. சென்னையை சுற்றி 25 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்படையுமாறு விஜய் மக்கள் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.




இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி  ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க மிச்சாங் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 14-12-23 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்