சென்னை: அதிமுகவினர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் தங்களது வாக்குகளை வேறு யாருக்கும் செலுத்தாமல் நோட்டாவுக்கு செலுத்தி தங்களது தூய்மையை நிலை நிறுத்த வேண்டும் என்று மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சி சத்யா அழைப்பு விடுத்துள்ளார்.
விக்கிரவாண்டிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி என மூன்று முக்கிய கட்சிகள் மோதுகின்றன. இந்த தேர்தலை அதிமுகவும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் புறக்கணித்து விட்டன. அதிமுகவினர் யாருக்கும் வாக்களிக்க கூடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதேசமயம் அதிமுகவினரின் வாக்குகளை குறிவைத்து பாமக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் கூட அது வாக்கு சேகரிப்பின் போது பயன்படுத்தியது.
இந்த நிலையில் அதிமுகவினர் தங்களது வாக்குகளை வீணடிக்காமலும், வேறு யாருக்கும் செலுத்தாமலும் நோட்டாவுக்கு அளிக்க வேண்டும் என்று மதிமுக மூத்த தலைவர் மல்லை சத்யா கோரிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இன்று 10. 07. 24 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அஇஅதிமுக வாக்குகள் யாருக்கு என்ற கேள்வி விவாதப் பொருளாக மாறி இருக்கும் நிலையில், இத்தேர்தலை புறக்கணிக்கும் பிரதான எதிர் கட்சியான அஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்கள் தொண்டர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்வது ஜனநாயக விரோத செயல். அதற்கு மாறாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய நோட்டா விற்க்கு வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற முன் வரவேண்டும்.
18 வது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மத்திய பிரதேசம் இந்தூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி பாம், பாஜக வேட்பாளர் சங்கர் லால் வாணிக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் காங்கிரஸ் பிரதிநிதி இல்லாமல் ஐந்து அரசியல் கட்சிகள் 9 சுயேட்சை வேட்பாளர்கள் என்று 14 பேர் களத்தில் நின்றனர். இதில் யாரையோ ஒருவரை ஆதரிக்காமல் தங்கள் ஆதரவு வாக்காளர்களை நோட்டா விற்கு வாக்களிக்க காங்கிரஸ் பிரச்சாரம் செய்ததில் ஜூன் 04 அன்று வாக்கு என்னும் போது நாட்டிலேயே நோட்டா விற்க்கு அதிக பட்சமாக 2 18 674 வாக்குகள் பெற்றது.
அஇஅதிமுக அதைப் பின்பற்றுமா என்று நாடு எதிர் பார்க்கிறது. நோட்டாவில் பதிவாகும் வாக்குகளை வைத்துத்தான் அஇஅதிமுக வின் மீதான சந்தேகப் பார்வை அதன் அரசியல் திசை வழிப் பயணம் என்ன என்பது தெரியவரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}