பாலியல் கொடுமைக்குள்ளான.. 3 வயது குழந்தை மீது புகார் கூறுவதா.. கலெக்டருக்கு அண்ணாமலை கண்டனம்!

Feb 28, 2025,07:56 PM IST

சென்னை: பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தை மீதுதான் தவறு உள்ளது என்று பேசிய மயிலாடுதுறை ஆட்சித் தலைவர் மகாபாரதிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடி பள்ளிக்குச் சென்ற மூன்று வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. இந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவத்தில் தற்போது மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




சீர்காழி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை தவறாக நடந்ததாகவும்,  அந்தப் பையன் முகத்தில் துப்பியதாகவும், அதுதான் அந்த சம்பவத்திற்குக் காரணம் என்று கலெக்டர் மகாபாரதி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர்,  அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு, தமிழ்நாடு பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம். 


விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்? என்று கூறியுள்ளார் அண்ணாமலை.


யார் இந்த மகாபாரதி?




மதுரையைச் சேர்ந்தவர் கலெக்டர் மகாபாரதி. கன்பர்ட் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். பல கிலோட்டர் தொலைவுக்கு நடந்து சென்று தனது  பள்ளிப்படிப்பை முடித்தவர். இவருக்கு விபத்து ஒன்றில் சிக்கி வலது கை பறி போய் விட்டது. இதனால் இடது கையால்தான் இவர் எழுதுவார். தனது ஒற்றைக் கையால்தான் அனைத்து வேலைகளையும் செய்து வருபவர். 


இவரது சிறப்பான பணிக்காக அவரைப் பாராட்டும் வகையில் கன்பர்ட் ஐஏஎஸ் அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டவர் மகாபாரதி. முதலில் திருவாரூர் கலெக்டராக செயல்பட்டார். பின்னர் கடந்த 2023ம் ஆண்டு முதல் மயிலாடுதுறை கலெக்டராக இருந்து வருகிறார்.


மிகச் சிறப்பான கலெக்டராக மயிலாடுதுறை மக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் மகாபாரதி.. அவர் ஏன் இப்படிப் பேசினார் என்பது தெரியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நா.த.க. தலைவர் சீமானிடம் ஒன்றே கால் மணி நேரமாக நடந்த போலீஸ் விசாரணை முடிவடைந்தது

news

கூட்டணியில் ஒரு விரிசலும் விழாது.. மாறாக உங்களது ஆசையில்தான் மண் விழும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ரம்ஜான் நோன்பு.. மார்ச் 2 முதல் தொடக்கம்.. தமிழ்நாடு அரசின் தலைமை காஜியார் அறிவிப்பு

news

3 வயது பெண் குழந்தை மீது குற்றம் சாட்டிப் பேசிய.. மயிலாடுதுறை கலெக்டர் அதிரடி இடமாற்றம்

news

பாலியல் கொடுமைக்குள்ளான.. 3 வயது குழந்தை மீது புகார் கூறுவதா.. கலெக்டருக்கு அண்ணாமலை கண்டனம்!

news

உயிர் மற்றும் உரிமை பிரச்சினை.. மக்களிடம் கொண்டு சேருங்கள்.. முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ

news

வானிலை ஆய்வு மையத்தின்.. முதல் பெண் தலைவராக நாளை பொறுப்பேற்கிறார்.. அமுதா!

news

முதல்வர் வேட்பாளர் விஜய்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. பிகே வருகைக்குப் பிறகு மாறிய தவெக மனசு!

news

சென்னையில்.. மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தாருக்கு எதிராக திமுக கூட்டணி போராட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்