சீனாவை நள்ளிரவில் நடுங்க வைத்த நிலநடுக்கம்.. 100க்கும் மேற்பட்டோர் பலி

Dec 19, 2023,08:19 AM IST

ஜிஷிஷான்: சீனாவில் நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.


சீனாவின் கான்சு மற்றும் குயிங்காய் ஆகிய மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவுக்கு மேல் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக இருந்தது.


பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மிகப் பெரும் பொருட் சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் மையம் லிகுகோ நகரில் இருந்தது. குயிங்காய் மாகாணம் என்பது, திபெத்திய இமயமலைத் தொடருக்கு அருகே இருக்கும் பகுதியாகும்.  இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும்.




நள்ளிரவு நிலநடுக்கத்தால் வீடுகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. சாலைகளிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்து ஓடி வெளியில் வந்தனர். பல இடங்களில் மின்சப்ளை பாதிக்கப்பட்டது. குடிநீர் விநியோகமும் தடை பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இதுவரை 111 பேர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் ரயில் போக்குவரத்தும், பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.


மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அதிபர் ஸி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

news

சென்னை கோயம்பேடு சந்தையில் எந்த காய் என்ன விலை?... இதோ முழு விபரம்...!

அதிகம் பார்க்கும் செய்திகள்