மதுரைக்காரர்களே ஜாக்கிரதை.. மங்கி குல்லா கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரிப்பு.. கவனம்!

Nov 06, 2024,03:53 PM IST

மதுரை: மதுரையின் புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டுக்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வரும் மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நாகமலைபுதுக்கோட்டை, அச்சம்பத்து பகுதிகளில் தனியாக பூட்டியிருக்கும் வீடுகளை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் மங்கி குல்லா கொள்ளையர்கள். அச்சம்பத்து அருகில் உள்ள ராம்கோ நகரில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் நோக்கில்  சிறிய கடப்பாறைகளையும் மற்ற உபகரணங்களையும் பயன்படுத்தி கதவை உடைக்க முயற்சித்துள்ளனர். அடுத்தடுத்து அருகில் இருந்த 4 வீடுகளைகளின் கதவையும் உடைக்க முயற்சித்துள்ளனர். நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


ஒரு வீட்டின் கதவை உடைக்க முற்பட்ட போது வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கோட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதைக் கண்ட முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மதுரை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




போலீசார் கூறுகையில், கடந்தாண்டு தீபாவளியின் போது இந்த மங்கி குல்லா  கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது அதே பகுதியை நோக்கி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்கள். மேலும் இவர்கள் குறிப்பிட்ட சமுாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்