திருவெம்பாவை பாசுரம் 05 :
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)
ஓலமிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.
பொருள் :
திருமாலாலும் பிரம்மாவாலும் கூட சிவனின் அடிமுடியை காண முடியாமல் திரும்பி வந்தனர். அவர்களுக்கு மலை மீது ஜோதி வடிவமாக காட்சி தந்தவர் நம்முடைய இறைவன். அவரின் அருளை பெற்று விட்டவள் போல் வாயில் தேனும், பாலும் சிந்துவது போல் இனிமையாக பேசக் கூடிய பெண்ணே உன்னடைய வீட்டின் கதவை திற. இந்த உலகத்தில் உள்ளவர்களும், வான் உலகில் உள்ளவர்களும் அவரை அணுக முடியாத போது, அவரை பற்றி நாம் அறிவோம் என சாதாரணமாக பேசுகிறாய். அவரை எவராலும் அறிய முடியாது. அவரின் அருளை பெறுவதற்காக அனைவரும் சிவனே சிவனே என்று ஓலமிட்டு கத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதை உணராமல் நீ உன்னுடைய கூந்தலுக்கு நறுமண திரவியங்களை தடவி அழகு செய்து கொண்டுள்ளதில் இருந்தே நீ எந்த அளவிற்கு சிவன் மீது பக்தி கொண்டுள்ளாய் என்பது தெரிகிறது.
விளக்கம் :
வெறும் வாயால் சொல்லிக் கொண்டிருந்தால் இறைவனின் அருளை எவராலும் பெற்று முடியாது. நாம் தான் இறைவன் மீது அதிக பக்தியாக இருக்கிறோம் என நாம் தான் பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இறைவனின் அருளை பெறுவது அத்தனை சுலபமல்ல. இறைவனை உணர வேண்டும் என்றால் உடலின் மீதான பற்றையும், இந்த உலகத்தின் மீதான பற்றையும் விட வேண்டும். இறைவனே அனைத்தும் என அவனை முழுவதுமாக சரணடைய வேண்டும். தினமும் கோவிலுக்கு சென்றாலும் கூட கவனத்தை வேறு எங்கோ வைத்திருப்பதற்கு பெயர் பக்தி அல்ல. மனம் இறைவனிடம் எப்போதும் முழுவதுமாக ஒன்றி இருக்க வேண்டும் என விளக்குகிறார் மாணிக்கவாசகர்.
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
{{comments.comment}}