மார்கழி திருவெம்பாவை பாசுரம் 13 .. "பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்"

Dec 29, 2023,11:45 AM IST

திருவெம்பாவை பாசுரம் 13 :


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

சங்கம் சிலம்பப் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.


பொருள் :




கரும் நீல நிலத்தில் குவளை மலர்கள் குளத்தில் பூத்திருப்பது கருமையான கூந்தலையும், அழகிய கண்களையும் உடைய பார்வதி தேவியை போல் தெரிகிறது. அருகில் காணப்படும் சிவந்த தாமரை மலர்கள் சிவ பெருமானின் சிவந்த மேனியை போல் உள்ளன. இந்த குளத்தில் தங்களில் அழுக்குகளை கழுவுவதற்காக மக்கள் வருகிறார்கள்.


அந்த மக்கள் நமச்சிவாய என சொல்லி நீராடுவதால் இது சிவனும், சக்தியும் இணைந்த இடமாக உள்ளது. இதில் கை வளையல்கள் சத்தமிட, நம்முடைய ஆபரணங்கள் ஓசை எழுப்ப, நாமும் நீந்தி, குளித்து நீராடி, அந்த இறைவனின் புகழினை பாடி நீராடுவோம் வாருங்கள்.


விளக்கம் :


பார்க்கும் இடங்கள், அவற்றில் இருக்கும் பொருள்கள் அனைத்திலும் இறைவன் காட்சி தருகிறான். அனைத்து இடங்களிலும் தெய்வீக தன்மை நிறைந்திருக்கிறது. இதை உணர்ந்து பக்தி செய்ய துவங்க வேண்டும். அப்படி இறைவனோடு உணர்வில் கலந்து விட்டால் பேரின்பம் நமக்கு கிடைக்கும். இறைவனுடன் ஒன்றி இருக்கும் இன்பத்தை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என அழைக்கிறார் மாணிக்கவாசகர்.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்