மார்கழி திருவெம்பாவை பாசுரம் 04 - ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

Dec 20, 2023,07:56 AM IST

சைவத்தில் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர் சிவ பெருமான் மீது எத்தனையோ பாடல்கள் பாடி உள்ளார். அவை அனைத்தையும் விட உயர்வானதாக போற்றப்படுவது திருவெம்பாவை என்னும் 20 பாடல்களின் தொகுப்பு தான்.


மார்கழி மாதத்தில் அனைவரும் இறைவனை வேண்டி, அவனின் அருளைப் பெற்று, அனைத்து நலன்களை பெற வேண்டும் என்பதற்காகவும், உலக உயிர்களை அஞ்ஞானத்தில் இருந்து எழுப்புவதற்காக மாணிக்கவாசகர் இந்த பாடல்களை இயற்றி உள்ளார்.


திருவெம்பாவை பாசுரம் 04 :




ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் ம் நீயேவந்(து)

எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.


பொருள் : 


ஒளி சிந்தும் புன்னகையை உடைய பெண்ணே, இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா? என வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை பார்த்து கேட்கிறாள் தோழி ஒருத்தி. அதற்கு பதிலளிக்கும் வீட்டிற்குள் இருக்கும் பெண், என்னை இன்னும் எழவில்லையா என கேட்கிறாயே, கிளிகளை போல் இனிமையாக பேசும் மற்றவர்கள் அனைவரும் வந்து விட்டார்களா? என பதில் கேள்வி கேட்கிறாள். அதற்கு சற்று கோபமாக பதிலளிக்கும் வெளியில் காத்திருக்கும் தோழி, எத்தனை பேர் வந்துள்ளார்கள் என எங்களை எண்ணச் சொல்லி விட்டு நீ தூங்கி காலத்தை போக்காதே. விண்ணவர்களுக்கு அரிய மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும், காண கிடைக்காத பேரழகுடனும் திகழும் நம் தலைவன் சிவ பெருமானை பாடி, பக்தி செய்ய வேண்டும். உனக்கு வேண்டுமானால் நீரே வந்து எண்ணி பார்த்துக் கொள். நீ என்னும் போது ஆட்கள் குறைவாக இருந்தால் அதற்கு பிறகு நீ மீண்டும் போய் தூங்கிக் கொள்.


விளக்கம் :


உலகத்தில் உள்ள மக்கள் ஏதேதோ காரணங்களை சொல்லி அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இதனால் இறைவனை எண்ணுவதற்கும் தவறி விடுகிறார்கள். தங்களின் தவறை விடுத்து, அவர்கள் பக்தி செய்யவில்லையே என மற்றவர்களுடன் ஒப்பிட்டுச் சொல்லி தாங்கள் விலகி செல்ல பார்க்கிறார்கள். ஆனால் இறைவனின் கருணை மிகப் பெரியது. அரிதான இந்த பிறவியை வீணடிக்காமல் இறைவனின் நாமத்தை கூறி, பக்தி செய்து, இறைவனின் திருவடிகளை சென்று சேர வேண்டும் என உலகத்தவர்களுக்கு உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்