- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 9:
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பொருள் :
விண்ணுலகில் இருக்கும் தேவர்களும், மற்றவர்களுக்கு நெருங்க முடியாத உயர்ந்த பரம்பொருளான சிவ பெருமானே! உன்னை வணங்கும் அடியர்களுக்கு அருள் செய்வதற்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்துள்ளாய். அருள் செய்து எங்களை வாழ வைத்தாய். இயற்கை வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிக்கும் எங்கள் பெருமானே! பரம்பரை பரம்பரையாக உனக்கு தொண்டு செய்து பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேன் போன்றவனே! பாற்கடலில் தோன்றிய அமுதத்தை போன்றவனே! கரும்பை போன்ற தித்திப்பானவனே! உன்னை விரும்பி வணங்கும் அடியவர்களின் எண்ணங்களில் நிறைந்து இருப்பவனே! உலக உயிர்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனே! உன்னுடைய அருட் பார்வை கிடைத்தால் உலக உயிர்கள் அனைத்தும் பிழைக்கும். அவற்றிற்கு அருள் செய்வதற்காக பெருமானே எழுந்தருள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!
{{comments.comment}}