- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 2 :
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே.
பொருள் :
சூரிய பகவானின் தேரோட்டியான அருணன் கிழக்கிற்கு வந்து விட்டான். உன்னுடைய முகத்தில் இருக்கும் கருணை ஒளியை போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து தன்னுடைய கதிர்களை விரித்து இருளை நீக்கி விட்டான். உன்னுடைய கண் மலர்களை போல் தாமரை குளத்தில் மலர்கள் மலர்ந்து விட்டன. வண்டு இனங்களில் அவற்றில் தேன் குடிக்க கூட்டமாக திரண்டு வந்து கொண்டிருக்கின்றன. திருப்பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் எங்கள் சிவ பெருமானே! அருளாகி செல்வத்தை வாரி வழங்குவதற்காக ஆனந்த மலை போலவும், அலை வீசும் கடலை போல் அருளை ஓயாமல் வழங்கிக் கொண்டிருப்பவனே கண் விழிப்பாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என்னாது நயன்தாரா கிட்ட ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டோமா.. சிவாஜி புரடக்ஷன்ஸ் மறுப்பு!
பெங்களூரு, அகமதாபாத்தை தொடர்ந்து சென்னை, சேலம்... அடுத்தடுத்து பரவும் HMPV வைரஸ்
கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த ஜஸ்டின் ட்ரூடோ.. அடுத்து என்ன நடக்கும்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 07, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
பெங்களூரைத் தொடர்ந்து குஜராத்திலும் பரவிய HMPV வைரஸ்... ஒரே நாளில் 3 பேருக்கு பாதிப்பு
ஆளுநர் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறக் கோரி.. திமுக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு இறுதி வாக்காளர் பட்டியல்.. அதிக, குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி எவை தெரியுமா?
Happy Pongal.. பொங்கல் பண்டிகைக்காக.. சென்னையிலிருந்து.. 14,104 சிறப்பு பஸ்கள் இயக்கம்!
ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்.. ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.. தவெக தலைவர் விஜய் கருத்து!
{{comments.comment}}