-ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 :
புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பொருள் :
பூமியில் பிறந்த அடியாளர்கள் அனைவரும் சிவனை போற்றி பாடி, அவருடைய அருளை பெறுகிறார்கள். ஆனால் பூமியில் வந்து பிறக்காத காரணத்தால் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என திருமாலும், அவரது நாபிக் கமலத்தில் பிறந்த நான்முகனான பிரம்மாவும் வருந்துகின்றனர். திருப்பெருந்துறையில் இருக்கும் சிவ பெருமானே! அவர்களுக்கு கிடைக்காத உன்னுடைய உண்மையான அருளை இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வழங்கிக் கொண்டிருக்கிறார். எவருக்கும் கிடைக்காத அமுதம் போன்றவனே, உன்னுடைய திருக்கண்கள் திறந்து எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!
{{comments.comment}}