மார்கழி முதல் நாள்- திருவெம்பாவை பாசுரம் 01 - ஆதியும் அந்தமும் இல்லா!

Dec 17, 2023,09:57 AM IST

திருவெம்பாவை பாசுரம் 01:


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்

விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே

ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.




பொருள் : 


ஆரம்பமும் முடிவும் இல்லாத மிகப் பெரிய ஒளியின் வடிவமாக விளங்கக் கூடிய இறைவனை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். கூர்மையான வாள் போன்ற கண்களை உடைய பெண்ணே, இந்த பாடலை கேட்ட பிறகும் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே. உன்னுடைய காதுகள் என இரும்பால் செய்யப்பட்டதா? நாங்கள் பாடுவது உன்னுடைய காதுகளில் விழவில்லையா? என முதல் தோழி, வீட்டிற்குள் இருக்கும் பெண்ணை பார்த்து பாடுனதாக மாணிக்கவாசகர் பாடி உள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மற்றொரு தோழி, நீ பாடுவது காதில் விழாமல் இல்லை இறைவனின் திருநாமத்தால் உணர்ச்சிவசப்பட்டு, அவள் விம்மி,விம்மி அழுது கொண்டிருக்கிறாள். தன்னையும் மறந்து பக்தி பெருக்காமல் அவள் அழுதை அறியாமல் தவறாக பேசுவது சரிதோனோ என்கிறாள்.


விளக்கம்  :

இறைவன் எப்படி இருப்பார், அவருடைய உருவம் எப்படி இருக்கும் என்பதை முதல் வரியிலேயே விளக்கி விட்டார் மாணிக்கவாசகர். இறைவனின் நாமத்தை சொல்லுவதால் தனக்கு கிடைத்த அந்த பேரின்பம் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் என ஒரு பெண்ணை தோழி எழுப்புவது போல் செல்லமாக எழுப்புகிறார். இது தூங்குபவர்களை எழுப்புவதற்கான பாடல் கிடையாது. அறியாமை என்ற ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கி கிடக்கும் ஆத்மாக்களை விழித்து எழச் செய்ய வேண்டும் என்பதற்காக மாணிக்கவாசகர் இவ்வாறு பாடி உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்