திருவெம்பாவை பாசுரம் 02 :
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்
பொருள் :
நாம் இரவு பகலாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம், நான் ஜோதி மயமான சிவ பெருமான் மீது அளவில்லாத பாசம் வைத்துள்ளேன் என்று வீரமாக பேசுவார். இப்போது நீராடி விட்டு, அவரை வழிபட அழைத்தால் வராமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்கிறார்கள் தோழியர். அதற்கு வீட்டிற்குள் இருந்து பதிலளிக்கும் தோழி, ச்சீ...இது என்ன கேலி பேச்சு. கண் அயர்ந்து விட்டதற்காக இப்படி பேசலாமா? என்கிறாள். அதற்கு தோழியர்கள், தேவர்களும் கூட தேடி வழிபட முடியாத சிவனின் மலர் பாதங்களை காட்டி, நமக்கு அருள் செய்ய அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.
சிவலோகத்தில் இருக்கும் அனைவரின் அன்புரிய இறைவன் தில்லை சிதம்பரத்தில் நடம் புரிபவனான ஈசனை காண்பதற்காக நாம் செய்ய வேண்டும் சீக்கிரம் வா என்கின்றனர்.
விளக்கம் :
தேவர்களும் கூட காண கிடைக்காதவர் சிவ பெருமான். அவர் நமக்கு அருள் செய்வதற்காக எப்போது தயாராக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது புரியாமல் உலக மாயையில், ஆசைகளில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உலக ஆசைகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள, யாருக்கும் கிடைப்பதற்கு அரிதான இறைவனின் அருளையும், முக்தியை அடைவதற்கு இறைவனை சரணாகதி அடைய வேண்டும். அதுவே வாழ்வின் நோக்கம் என்பதை உலக மக்களுக்கு புரிய வைக்கிறார் மாணிக்க வாசகர்.
விடாமல் துரத்திய ஜடேஜா, தோனி.. கடைசி வரை போராடித் தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஷவ்வால் மாத பிறை தெரிந்தது.. தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பெரு விழா.. தலைமை காஜியார் அறிவிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக "செஞ்சுரி" அடித்த அஸ்வின்.. 100வது போட்டியில் ஆடுகிறார்!
வெளுத்து வாங்கும் வெயில்.. 1 டூ 5ம் வகுப்புக்கு.. இறுதித் தேர்வுகளை 17ம் தேதியுடன் முடிக்க உத்தரவு!
பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி?.. 6ம் தேதி மதுரையில் சந்திப்பு என தகவல்!
எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் குறித்த காட்சி.. மன்னிப்பு கேட்டார் நடிகர் மோகன்லால்
கன்னியாகுமரி நகராட்சியானது.. மேலும் 6 நகராட்சிகளும் பிறந்தன.. வெளியானது அரசாணை.. !
தமிழக அரசுப் பள்ளிகளில்.. தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா?.. டாக்டர் ராமதாஸ் ஆதங்கம்!
பிறை தெரிந்தது.. சவூதி அரேபியா, வளைகுடா நாடுகளில் ரம்ஜான் கொண்டாட்டம்.. இந்தியாவில் நாளை!
{{comments.comment}}