மார்கழி 03 - திருவெம்பாவை பாசுரம் 03... முத்தன்ன வெண்ணகையாய்!

Dec 19, 2023,08:13 AM IST

திருவெம்பாவை பாசுரம் 03 :


முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிரெழுந்தென்

அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துள் கடை திறவாய்

பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மைதீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ

எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ

சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்




பொருள் : 


முத்துப் போன்ற வெள்ளை நிற பற்களைக் காட்டி அழகாக சிரிக்கும் பெண்ணே, சிவ பெருமான் மீதான தீராத அன்பும், பக்தியும் வைத்துள்ளதாக வாய் இனிக்க பேசுவாயே. ஆனால் அந்த சிவனை தரிசிக்க அழைக்க வந்தால் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே. வந்து உன்னுடைய வீட்டின் கதவை திற என்கிறாள் தோழி ஒருத்தி. அதற்கு வீட்டிற்குள் இருக்கும் பெண், நீங்கள் பல காலமாக ஈசன் மீது பக்தி செய்த வருகிறீர்கள். நான் பக்தி செய்வதற்கு புதியவள் என்பதால் சற்று கண் அயர்ந்து தூங்கி விட்டேன். அந்த தவறை மன்னிக்காமல் இப்படி கேலி பேசுவது சரியா? என கேட்கிறாள்.  அதற்கு வெளியில் இருக்கும் தோழிகள், நீ சிவன் மீது எத்தனை அன்பு வைத்துள்ளாய் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். நமக்குள் வீணாக பேசிக் கொண்டிருக்காமல் இது நம் சிவனை போற்றி துதிக்கின்ற நேரம் என்கிறாள்.


விளக்கம் :


பக்தியில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என எதுவும் கிடையாது. பக்தி செய்வதில் தன்னுடைய பக்தி தான் சிறந்தது என தற்பெருமை பேசி காலத்தை வீணடிக்காமல் இறைவனை வணங்கி, அனைவரும் அவரின் அருளை பெற வேண்டும் என மாணிக்கவாசகர் அழைக்கிறார். பக்தி என்பது வெளித் தோற்றத்தில், பகட்டில் இல்லை. அது விளம்பரத்திற்குரியது அல்ல. வெறும் வார்த்தையால் இறைவன் மீது நான் அவ்வளவு அன்பு வைத்துள்ளேன், இவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என சொல்வது வீண் செயல் என்றும் சொல்கிறார்.


சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்