தொடர் மழை.. வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி.. மக்கள் தவிப்பு.. மீட்புப் பணிகள் தீவிரம்

Dec 18, 2023,01:21 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக பெய்த தொடர் மழையால், தூத்துக்குடி நகரில் அநேக இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகின்றன.


தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வழ்க்கை பாதிக்கப்பட்டது. 


வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே மக்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது. கனமழையால் அணைகள் நிரம்பி அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பல மணி நேரம் நீடித்த மழையால் மக்கள் தவித்து வருகின்றனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 




வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தற்போது விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 


தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழையால் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள தெருக்களில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் சென்றதால் மக்கள் வெளியே வர முடியாமல் முடங்கினர். கடைகள் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. சாத்தான்குளம், அண்ணாநகர் பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் அந்தப் பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். 


பேய்குளம், கருங்குடல், அரசூர், பழனியபுரம், பண்ணம்பாறை, தட்டார் மடம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களும் மழை நீர் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். மின்சாரம் முழுமையாக தடைப்பட்டது. சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சாலைகளில் மரங்களும் விழுந்துள்ளன.


சென்னையிலிருந்து தூத்துக்குடி வரும் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  காலை 11:55க்கு மணிக்கு வர வேண்டிய விமானம் மதுரைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோல மாலை 4 மணிக்கு வர வேண்டிய விமானம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். இதே போல் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்