பாதுகாப்பு குறைபாடு.. நாடாளுமன்றத்தில் தொடரும் எம்.பிக்கள் சஸ்பென்ஷன்.. இதுவரை 142 பேர்!

Dec 19, 2023,09:13 PM IST

புதுடில்லி: நாடாளுமன்றத்தில்  எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மக்களவையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பிக்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 


நாடாளுமன்ற மக்களவையில் இரு இளைஞர்கள் வண்ணப் புகை குண்டுகளை வீசி பெரும் பரபரப்பு ஏற்படுத்தினர். இதில் சம்மந்த பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் எப்படி இப்படி பாதுகாப்பு குறைபாடுகள் நடந்தது என்று பல்வெறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 


எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல்கள் நடந்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சி எம்.பிக்கள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.




லோக்சபாவைப் பொறுத்தவரை முதலில் 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் 33 பேர் சஸ்பெண்ட் ஆனார்கள். இன்று மேலும் 50 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  ராஜ்யசபாவையும் சேர்த்து தற்போது 142 எம்.பிக்கல் இதுவரை சஸ்பெண்ட் ஆகியுள்ளனர்.  இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.


இன்று, திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், ஜெகத்ரட்சகன், தனுஷ் குமார், கணேசன் மூர்த்தி, சுப்ரியா சுலே, சசி தரூர் உள்ளிட்ட 50 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை காணாத அளவில் ஒரே கூட்ட தொடரில் 142 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். 


இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்