தந்தனத்தோம் என்று சொல்லியே... எத்தனை எத்தனை, எல்லாம் எங்கே.. அழிவின் விளிம்பில் அருமைக் கலைகள்!

Mar 28, 2024,07:17 PM IST

- பொன் லட்சுமி


சென்னை: தமிழ்நாடு கலைக்கும், கலாச்சாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பெயர் போன பூமி. தமிழர்களின் கலைகள் கடல் கடந்து எத்தனையோ தேசங்களுக்குப் பரவியிருந்தது.. பரவிப் புகழ் பெற்று விளங்கியது. ஆனால் இன்று பல கலைகளை நாம் தொலைத்து விட்டோம்.. அல்லது மறைந்து விட்டோம்.. சில கலைகள் அழியும் நிலைக்கு போய் விட்டன.


இன்றைய நாகரிக உலகில் பல விஷயங்களை நாம்  இழந்து வருகிறோம். அதில் முக்கியமான ஒன்று நாட்டுப்புற நடன கலைகள். இந்த வகையான நடன கலைகள் கிராமத்தில் கூட இப்போது அருகி விட்டது என்பதே மிகவும் வேதனையான விஷயம். நாட்டுப்புற நடன கலைகள் நம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் போற்றி  பாதுகாத்தவை. ஆனால் இன்று கேட்பாரற்று ஒரு மூலையில் கிடக்கிறது.


ஊடகங்கள், தொழில் வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் மக்களுக்கு பல நல்ல தகவல்களைக் கொண்டு சென்ற பெருமை  இக் கலைகளையே சாரும்.. இந்தக் கலைகள் மூலமாகத்தான் அந்தக் காலத்தில் வெள்ளையனுக்கு எதிராக பல செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்தனர் நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள்


இதோ நாம் மறந்து போன கலைகளின் சில...


கரகாட்டம்:-




இன்றும் ஒரு சில கிராமங்களில் மட்டும் கொடை விழா சமயங்களில் நடத்தப்படுகிறது. இது மாரியம்மன் கதை தொடர்புடையது.. ஒரு காலத்தில் கரகாட்டம் என்றால் அதில் ஆடும் கலைஞர்கள் அவ்வளவு கண்ணியமாக ஆடுவார்கள்.. ஆண்களும் சரி பெண்களும் சரி அவர்களின் உடை அலங்காரமோ நடன அசைவுகளோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்போர்கள் அனைவரும் ரசிக்கும் விதமாக இருந்தது.. ஆனால் இன்று நடனத்திலும் சரி உடல் அசைவிலும் சரி பேச்சிலும் சரி இரட்டை அர்த்தங்களாக ஆபாசமாகவே ஒரு சிலர் ஆடுகின்றார்கள்.


ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பல நல்ல கலைஞர்களின் பெயர்களும் கரகாட்டத்திற்குரிய  மதிப்பும் கெட்டுப் போகிறது.. அன்று கோவில் கொடையில் தெய்வத்தை பற்றி புகழ்ந்து பாடுவதற்காகவே கலைஞர்கள் கரகாட்டம் ஆடுவார்கள்.. ஆனால் இன்று ஒரு சில கலைஞர்கள் ஆபாசமாக பேசி நடனமாடுவதால்  கரகாட்டத்திற்குரிய மதிப்பு கெட்டுப் போய்விட்டது.


இது ஒரு பக்கம் இருந்தால் இந்தக் கலையை பலர் மறக்க ஆரம்பித்து விட்டனர். அதுதான் வருத்தம் தருகிறது. தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வள்ளிக் கும்மியை எப்படி மீட்டெடுக்க கடுமையான முயற்சிகள் தற்போது நடந்து வருகிறதோ, அதுபேல கரகாட்டத்தையும் மீண்டும் புதுப்பிக்க நடவடிக்கைகள் தேவை.


ஒயிலாட்டம் :-


ஆண்களின் கம்பீரத்தை உணர்த்தும் இந்த ஒயிலாட்டம் ஆண்களால் மட்டுமே ஒரு காலத்தில்  ஆடப்பட்டது.. ஆனால் இன்று பெண்களும் இந்த ஒயிலாட்டத்தை ஆடுகிறார்கள்..  ஆண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அழகாக நளினமாக  ஒரே வரிசையில் நின்று ஆடுவர்.. தலையில் ஒரே  நிறத்தில் துணியை முண்டாசு போல கட்டி காலில் சலங்கை அணிந்து,  இரு கையிலும் வெவ்வேறு நிறத்தில் சிறு துணியை இசைக்கேற்ப அங்கும் இங்கும் வீசி குழுவாக சேர்ந்த ஆடுவார்கள்.


முந்தைய காலத்தில் ராமாயணம் கதை, மகாபாரத கதை,பெரும்பாலும் வள்ளி திருமண கதை,முருகன் கதை  போன்ற கதைகள் வாய்மொழியாக பாடப்பட்டு ஒயிலாட்டத்தில்   ஆடப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் சமூக பிரச்சினைகள் குறித்தும் பாடி ஆடுகிறார்கள். இந்த ஒயிலாட்டம் ஆடுவதால் மனமும் உடலும் ஒருநிலை படுத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க  இவ்வாறான கலைகளை அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் நம் பாரம்பரிய கலைகளையும் அழிவின் விளிம்பில்  இருந்து காப்பாற்றலாம். இளைஞர்களையும் தவறான பாதையில் செல்வதை தடுக்கலாம்.


பாவை கூத்து :-


அன்றைய காலகட்டத்தில் மக்களின் ஒரே பொழுது போக்காகவும் கேளிக்கையாகவும் அமைந்தது தான் இந்த பாவைக்கூத்து. இதற்கு பொம்மலாட்டம் என்ற ஒரு பெயர் கூட இருந்தது. உயிரற்ற பாவைகளை   உயிருள்ள கதாபாத்திரமாக மாற்றி வடிவமைத்தனர் கலைஞர்கள்.  ஆட்டின் தோலில் தங்களுக்கு தேவையான உருவங்களை  செய்து அதற்கு வண்ண வண்ண சாயங்களை பூசி அதற்கு மத்தியில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு விளக்கு வெளிச்சத்தின் மற்றொருபுறம் வெள்ளை திரைச்சீலையின் பின்னால் இருந்து கொண்டு அந்த குச்சியை ஆட்டுவதன் மூலம் அந்த பொம்மைகள் அங்கும் இங்கும் ஆடும்.


இந்த பொம்மலாட்டத்தின் மூலமாக தான் அன்றைய காலத்தில் ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாச கதைகளின் உண்மைகள் மக்களுக்கு தெரிய வந்தது. இந்த கலைஞர்கள்  ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு தங்களது குரல்களை மாற்றி மாற்றி பேசுவர். இந்த கூத்தை பார்ப்பதற்கு மக்கள் குடும்பம் குடும்பமாக வருவர். ஒரு காலத்தில் மக்களின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்திருந்த இக்கூத்தானது  இன்று அழிவின் விளிம்பில் உள்ளது.


இன்னும் பல வகையான ஆட்டங்கள் இருந்தன. இன்று  இந்த வகையான ஆட்டங்கள் பல இப்போது கிராமத்தில் கூட இல்லை என்பதே மிகவும் வருத்தமான விஷயம்.. அழிந்து வரும் கலைகளையும் நம் கலாச்சாரத்தையும் காக்க வேண்டும். நாம் இழந்த கலைச் செல்வங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல மீதி இருக்கும் கலைச் செல்வங்களையாவது மீட்டெடுக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

news

ப வரிசைப் பட நாயகன்.. தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்.. பீம்சிங் நூற்றாண்டு விழா.. நாளை!

news

உங்களுக்காக நடனமாடுகிறோம்.. எங்களுக்காக இதைச் செய்யுங்களேன்.. மேடை நடனக் கலைஞர்கள் கோரிக்கை!

news

மீண்டும் இ பாஸ் கட்டாயம்.. கொடைக்கானல், ஊட்டியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

news

TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களா நீங்கள்.. சூப்பரான குட் நியூஸ் சொன்ன தேர்வாணையம்..!

news

Weather Report: தமிழ்நாட்டில்.. 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு .. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

news

விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால்... விசிக என்ன இன்ஆர்கானிக் மாஸா?.. விசிக தலைவர் திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்