விஜயகாந்த் மரணத்தால் தடைபட்ட "சரக்கு" படம்.. ரீ ரிலீஸ் செய்கிறார் மன்சூர் அலிகான்!

Jan 17, 2024,11:22 AM IST

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணத்தால் ரிலீஸ் செய்வது தடைபட்டதால் நிறுத்தப்பட்ட சரக்கு படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யவுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான மன்சூர் அலிகான்.


ஏகப்பட்ட நடிகர் பட்டாளத்துடன் எடுக்கப்பட்ட படம் சரக்கு. மன்சூர் அலிகானின் சொந்தப் படம். யோகிபாபு, கின்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் என ஏகப்பட்ட பேர் படத்தில் நடித்துள்ளனர்.




இப்படத்தை டிசம்பர் 29ம் தேதி ரிலீஸ் செய்தனர். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு அந்த சமயத்தில் நேர்ந்ததால் படம் நிறுத்தப்பட்டு விட்டது. 


இந்த படத்தின் சமயத்தில்தான் ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கினார் மன்சூர் அலிகான். திரிஷா விவகாரம் குறுக்கிட்டது.. இதுதொடர்பான பரபரப்புகள் நிலவி. அதைத் தாண்டி படம் வெளியானது. ஆனால் விஜயகாந்த் மரணத்தால்  படம் நிறுத்தப்பட்டது. இப்போது படத்தை உலக அளவில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யவுள்ளாராம் மன்சூர் அலிகான்.


உரிய நேரம் பார்த்து ரீ ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். வெளிநாடு உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாம் படக் குழு.




சரக்கு படத்தின் பெயரை ஒரு மார்க்கமாக இருக்கிறது என்றால் படத்தின் வசனங்களும் கூட தாறுமாறாகத்தான் இருக்கிறது. இதனால் படம் நிச்சயம் பெரிய வரவேற்பைப் பெறும் என்று மன்சூர் அலி கான் டீம் நம்புகிறதாம். 


தடைபட்டாலும் கூட, படம் மீண்டும் ரிலீஸாகும்போது நிச்சயம் தடபுடலாக வரவேற்கப்படும் என்று செம நம்பிக்கையில் உள்ளதாம் சரக்கு டீம்.

சமீபத்திய செய்திகள்

news

இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்