சென்னை: பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், அவர் எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டு நடித்துள்ளதாக வெளியான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகரும் இயக்குனருமான பாரதிராஜா மகன் மனோஜ் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். 48 வயதிலேயே அவரின் இழப்பு குடும்பத்தினர் மட்டுமில்லாமல் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவரது உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை நட்சத்திரங்கள் ,அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தில் மனோஜ் பாரதிராஜா அறிமுகமானார். இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தில் உள்ள பாடல்களும் சூப்பர் ஹிட் பெற்றது. குறிப்பாக மனோஜ் இப்படத்தில் இடம்பெற்ற ஈச்சி எலுமிச்சை பாடலையும் பாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம் போன்ற படங்கள் வெற்றி வாய்ப்பை கொடுத்தது. ஈஸ்வரன், விருமன், கடல் பூக்கள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் இப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
அதேபோல் இவருக்கு நடிகராக வேண்டும் என்ற ஆசை இல்லை. இயக்குனராகவே ஆசைப்பட்டு தமிழ் சினிமாவுக்கு வந்த இவர் நடிகராகவே அறிமுகமானார். அதனால் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பம்பாய் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதேபோல் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த எந்திரன் படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். பின்னர் அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநாடு படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது.
இதற்கிடையே மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவத்தின் மூலம் மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இப்படி நடிகர், இயக்குனர், பாடகர், என பன்முக திறமை கொண்ட மனோஜ் பாரதிராஜா மரணம் அடைந்த பிறகு அவரைப் பற்றிய பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளிவர தொடங்கி உள்ளன.
அதாவது எந்திரன் படத்தில் மனோஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்தது மட்டுமல்லாமல் ரஜினிக்கு டூப் போட்டு உள்ளாராம். சங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் படத்தில் ரஜினிகாந்த் வசீகரன் மற்றும் சிட்டி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் ரஜினிகாந்த் கார் ஓட்டுவது போன்று முக்கியமான சீன் ஒன்று வரும். அந்த சீசனில், பென்ஸ் காரில் ஐஸ்வர்யா ராய் பின் சீட்டில் அமர்ந்தபடி இருக்க, முன் பகுதியில் வசீகரன் ஒரு பக்கம் டிரைவர் சீட்டில் அமர்ந்தபடியும், பக்கத்து சீட்டில் சிட்டி ரோபோவும் பயணிப்பார்கள். சிட்டி ரஜினி கார் ஓட்டும்போது, அருகில் வசீகரனுக்கு டூப் போட்டுள்ளார் மனோஜ். அப்போது ரஜினி மற்றும் மனோஜ் டூப் போட்டபடி எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் வியப்புடன் ஷேர் செய்து வருகின்றனர்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}